Pages

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

கண்ணீர் அஞ்சலி

நம் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் எண்ணில் அடங்காதவை. கடும் காற்று, மழை காரணமாக மாத்தளை ரத்தோட்டையில் மரமொன்று வேனில் சரிந்து வீழ்ததில் உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் மன்னம்பிட்டியைச் சேர்ந்தவர்களே. 



இவ் விபத்தில் மூவர் மரணமடைந்தனர்.பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறைவனடி சேர்தவர்களின் ஆத்மா சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்.



செவ்வாய், 18 டிசம்பர், 2012

மன்னம்பிட்டியில் வெள்ளம் (18.12.2012) Manampitiya Flood - 18.12.2012


மன்னம்பிட்டியில் வெள்ளம்  பகுதி - 2

 Manampitiya Flood  part - 2   (18.12.2012)


நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும், அருகிலுள்ள குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் மன்னம்பிட்டி- பொலன்னறுவை ஆகிய நகர்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னம்பிட்டியிலிருந்து பொலன்னறுவை செல்ல புகையிரதத்தையே பலர் நம்பியிருந்தனர், புகையிரதப் பாதையில் வெள்ளம் பாய்ந்ததால் புகையிரதமும் நிறுத்தப்பட்டது. சிலர் புகையிரதப் பாதையில் நடந்து சென்றதைக் காண முடிந்தது.

 மழை தொடர்வதால் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பலர் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.




மன்னம்பிட்டி கொட்டலிப் பாலத்தின் மேலோல் வெள்ளம் செல்லும் காட்சி


மன்னம்பிட்டியில் வெள்ளம் (17.12.2012) Manampitiya Flood - 17.12.2012

மன்னம்பிட்டியில் வெள்ளம்  பகுதி - 01
Manampitiya   Flood -   Part - 01                  (17.12.2012 )

இன்று  (17.12.2012)  மன்னம்பிட்டியில் நீர் மட்டம் உயர்ந்து  கொண்டு வருகின்றது.  நேற்றுடன் ஒப்பிடுகையில் புதிய பகுதிகளையும் வெள்ள நீர் தனதாக்கிக் கொண்டுள்ளது.  சிறிய வாகனங்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இன்று ( 17.12.2012)  எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.



மெல்ல மெல்ல பொலன்னறுவை - மன்னம்பிட்டி பிரதான வீதியை வெள்ளம் மூடிக் கொண்டு வரும் காட்சி.

புதன், 21 நவம்பர், 2012

சூரன் போர் - 2012 காணொளி, படத்தொகுப்பு

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி 
ஆலயத்தின் சூரசம்கார விழா - 2012


கடந்த 19.11.2012 அன்று மாலை வெகு விமர்சையாக தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்  சூரசம்கார விழா நடைபெற்றது. இவ் விழாவில் கந்தஸஸ்டி விரதத்தினை கடைப்பிடித்த பக்கதர்களும், ஏனையோரும் கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருனைப் பெற்றேகினர்.

 கானொணி ( Video)




தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் சூரசம்கார விழா  தொடர்பாக காணொளியும் , படத் தொகுப்பும்.




 சூரனை வதம் செய்ய ஆலயத்திலிருந்து வெளியே செல்லும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி



ஞாயிறு, 18 நவம்பர், 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவில் கந்தஸஸ்டி விரதம்

தம்பன்கடவை( மன்னம்பிட்டி) ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் கந்தஸஸ்டி விரதத்தினை கடந்த 14.11.2012 அன்று தொடக்கம் பக்தர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.


முருகப் பெருமானின் உள்வீதி உலா தொடர்பான கானொளியினை (Video) கீழ்உள்ள முகவரியில் காணலாம்.



தினமும் முருகப் பெருமானுக்கு விசேடபூஜை களும், உள்வீதி உலாவும் நடைபெறுகின்றது.


முருகப் பெருமானுக்கு வசந்த மண்டபப் பூஜை இடம் பெறுகின்றது.

செவ்வாய், 13 நவம்பர், 2012

கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமி உள்வீதி உலா - படத் தொகுப்பு


கேதார கௌரி விரத நிறைவும், கேதாரி அம்பிகா சமேத கேதார
சுவாமி வசந்த மண்டபப் பூஜையும் சுவாமி உள்வீதி வருதலும்.

மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான, ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த கேதார கௌரி விரதம் நிறைவு பெற்றது.




கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமியின் அழகுத் தோற்றம்.


திங்கள், 12 நவம்பர், 2012

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.





உங்கள் எண்ணங்கள் நிறைவேற பிராத்திக்கின்றேன்.

- www.mannampitiya.blogspot.com

வெள்ளி, 9 நவம்பர், 2012

திருவிளக்கு பூஜை - 2012 ( படத் தொகுப்பு)


மன்னம்பிட்டி,அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான,ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் திருமதி ரூபினி தேனுஹாசனின் உபயத்துடன் திருவிளக்குப் ப் பூஜை - 2012 இனிதே நடைபெற்றது.






இத் திருவிளக்குப் பூஜை - 2012 யின் படத்தொகுப்பினை காணலாம்.



ஞாயிறு, 4 நவம்பர், 2012

திருவிளக்கு பூஜை - 2012




மன்னம்பிட்டி
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான,
ஆலய பரிபாலன சபையினரின்
திருவிளக்குப் பூஜை - 2012 அழைப்பிதழ்

அம்பாள் அடியார்களே,

பெண்களுக்கு லஷ்மி கடாட்சத்தை ஏற்படுத்தும் திருவிளக்குப் பூஜையை  மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ பத்தரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் நடத்த திருவருள் கிடைத்துள்ளது.




இத் திருவிளக்குப் பூஜையில் கலந்து கொள்வதால்,

தங்களது அபிலாஷைகளைப் ( வேண்டுதல்களைப் ) பெற்றுக் கொள்வதுடன், உங்களது இல்லத்திற்கும் லஷ்மி கடாட்சம், மாங்கல்ய கடாட்சம், தீர்க்க சுமங்கலி போன்ற கடாட்சங்களைப் பெற்றுகொள்ளலாம் என்பது ஐதீகம்.

திருவிளக்குப் பூஜையில் கலந்து கொள்ள வரும் பெண்கள்மஞ்சல் சேலை அணிந்து வரவும்.


இத் திருவிளக்குப் பூஜையில் கேதார கௌரி விரத அடியார்கள் அல்லாதோரும் கலந்து கொள்ளலாம்.


காலம் -- 08.11.2012 ( வியாழக்கிழமை)

நேரம் -- மாலை 3.30 மணிக்கு

இடம்- -அருள்மிகு ஸ்ரீ பத்தரகாளி அம்பாள் தேவஸ்தானம்,மன்னம்பிட்டி.


அனைத்து பக்த அடியார்களையும் மன்னம்பிட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் அருளைப்பெற அழைக்கின்றோம்.


ஆலய பரைிபாலன சபையினர்,
மன்னம்பிட்டி.








திங்கள், 29 அக்டோபர், 2012

மன்னம்பிட்டி அணை - படத் தொகுப்பு

மன்னம்பிட்டி மீன்பிடிச் சங்கத்தின் முயற்சியால் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மன்னம்பிட்டி அணைக் கட்டின் ஒரு பகுதி முடிவடையும் தறுவாயில் உள்ளது.







இந்த அணைக்கட்டு மன்னம்பிட்டி மீன்பிடிச் சங்கத்தின் பங்களிப்புடன் அதன் அங்கத்தவர்களின் சிரமத்துடன் அமைக்கப்படுகின்றது. அணைக்கட்டு வேலைகள் ஆரம்பமானது முதல் இன்று வரையிலான ஒரு புகைப்படத் தொகுப்பு.


வெள்ளி, 26 அக்டோபர், 2012

இலகுவாகத் தமிழில் எழுத உதவும் ஒரு மென்பொருள் NHM Writer



வலைப்பூ ( Blogspot) , பேஸ்புக் ( Facebook) போன்றவற்றில் இலகுவாகத் தமிழில் எழுத உதவும் ஒரு மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம்.

 Google, Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.



இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

வின்டோஸ் XP/2003 , Vista , Win 7 ஆப்ரேடிங் சிஸ்டங்களில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.

( நான் தற்போது இப் பதிவினை எழுதிக் கொண்டிருப்பது windows 7 இல் ஆகும்)



இம் மென்பொருளின் பெயர் NHM Writer ஆகும்,

இதன் இணையத்தள முகவரி

http://software.nhm.in/products/writer



(கணினி அறிவு குறைந்தவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிதாகப் படங்களின் உதவியுடன் விளக்கியுள்ளேன்) 


செவ்வாய், 23 அக்டோபர், 2012

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழா கொண்டாட்டம் - படத் தொகுப்பு


சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழாக் கொண்டாட்டம்



சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னம்பிட்டி ஸ்வயம் சேவக சங்கத்தினர் ஏற்பாடு செய்த மாபெரும் சமயப் பேரணியும் பொதுக்கூட்டமும் 19.10.2012 அன்று (வெள்ளிக் கிழமை) காலை 9.00 மணிக்கு மனம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 



புதன், 17 அக்டோபர், 2012

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழா

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழா 
அழைப்பிதழ்

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னம்பிட்டி ஸ்வயம் சேவக சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் எதிர்வரும் 19.10.2012 அன்று (வெள்ளிக் கிழமை) காலை 9.00   மணிக்கு மனம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது


இவ்விழாவிற்கு உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு  அன்புடன் அழைக்கின்றனர்.

வியாழன், 4 அக்டோபர், 2012

“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” விழா - படத்தொகுப்பு


“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” விழா




 “ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” என்னும் தொனிப் பொருளில்  எமது பாடசாலை(பொல/ மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய ) அதிபர், ஆசிரியர்கள் ஒழுங்கு செய்த “சிறுவர் தினக் கொண்டாட்டம்”  03.10.2012 அன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்குப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.


திங்கள், 1 அக்டோபர், 2012

சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே - அழைப்பிதழ்

“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” விழா அழைப்பிதழ்




“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” என்னும் தொனிப் பொருளில் இம்முறை எமது பாடசாலை(பொல/ மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய ) அதிபர், ஆசிரியர்கள் ஒழுங்கு செய்துள்ள “சிறுவர் தினக் கொண்டாட்டம்” எதிர்வரும் 03.10.2012 அன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்குப் பாடசாலை மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.


சனி, 15 செப்டம்பர், 2012

மன்னம்பிட்டி முதல் உகந்தை வரை

பாடசாலையின் இரண்டாம் தவணை விடுமுறையின் போது மன்னம்பிட்டியிலிருந்து உகந்த வரை (உகந்தை முருகன் ஆலயத்திற்குச்) செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

மன்னம்பிட்டியிருந்து பேரூந்தில் கல்முனை வரைச் சென்று அங்கிருந்து வாடகை வண்டியில் சென்றுவந்தேன்.

மன்னம்பிட்டியிலிருந்து அக்கரைப்பற்று பேருந்தில் காலை 5.45க்கு ஏறி 9.30க்கு கல்முனையை அடைந்தேன்.

(எமது பேரூந்துகளில்பயணம் செய்யத் தனித் திறமை வேண்டும். இது பற்றி இன்னமொரு பதிவில் எழுதவுள்ளேன்)

கல்முனையிலிருந்து உகந்தை ( இதனை சிங்கள மக்கள் ஒக்கந்தை என்று கூறுவர்) முருகன் ஆயலயத்திற்னான பயணம் தொடங்கியது. பயணத்தின் போது கிழக்குக் கடற்கரையின் அழகினை பார்த்துக் கொண்டே செல்லக் கூடியதாக இருந்தது.

ஒவ்வொரு ஊரிலும் மக்கள் தங்களுக்குரிய தனித்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். மன்னம்பிட்டி முதல் பானமை வரை சாலை முற்றிலும் சீரமைக்கப்பட்டுக் காணப்பட்டது. ( ஆசியாவின் ஆச்சர்யம் ???) பானமை சென்றதும் எம்மை வரவேற்றது பானமைப் பிள்ளையார் ஆலயம்.


பானமை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வெளித் தோற்றம்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம் - 2012


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012.07.017 அன்று வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

18.07.2012 செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

ஆகம முறைப்படி மகோற்சவ குருக்கள் சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்கள் தீர்த்தோற்சவத்தினை நடத்தி வைத்தார்கள்.







ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.கனகராஜா ஐயா அவர்களுடன் மகாவலி கங்கையில் தீர்த்தம் ஆடுவதற்காக சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்களும், ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ. கு.கு. விஜியநாத குருக்கள் அவர்களும் சென்று கொண்டிருக்கின்றனர்.

செவ்வாய், 31 ஜூலை, 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவத்தின் இறுதிநாள் திருவிழா


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரலேவாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவத்தின் இறுதிநாள்  திருவிழா 2012.07.017 அன்று இரவு, வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.


அவை தொடர்பான படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.




வியாழன், 26 ஜூலை, 2012

ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவ பகல் திருவிழா


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாவாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவத்தின் இறுதிநாள் பகல் திருவிழா 2012.07.017 அன்று பகல், வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.



ஆகம முறைப்படி மகோற்சவ குருக்கள் சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்கள் கொடிமர வழிபாட்டுடன் பகல் திருவிழாவினை ஆரம்பித்து வைக்கின்றார்.






புதன், 25 ஜூலை, 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் சங்காபிசேகம்


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரலேவாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012.07.017 அன்று வெக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

17.07.2012 செவ்வாய்க்கிழமைசங்காபிசேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.



சங்காபிசேகம் தொடர்பான படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

செவ்வாய், 24 ஜூலை, 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012.07.017 அன்று வெக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

17.07.2012 செவ்வாய்க்கிழமை முதலி குடும்பத்தினால் வேட்டைத் திருவிழாவும்,பந்தற்காட்சித் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.





வெள்ளி, 20 ஜூலை, 2012

வெள்ளிக் கம்பி வேலி


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத தேவஸ்தானதிற்கு வெள்ளிக் கம்பி வேலி ஒன்றினை, மன்னம்பிட்டடியில் வாழ்ந்து மறைந்த அதிபர் அமரர்.ச.சிமியோன் அவர்களின் ஞபகார்த்தமாக திரு.மு.உதயகுமார் (மருமகன்) குடும்பத்தினர் அமைத்துக் கொடுத்துள்ளனர்.



வெள்ளிக் கம்பி வேலி அமைத்தல் தொடர்பான படங்கள் கீழே உள்ளன

வெள்ளிக் கம்பி வேலியினை “காலித் நிறுவன ஊழியர்கள்” அமைத்துக் கொண்டிருக்கின்றனர்- 01


வெள்ளி, 6 ஜூலை, 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத தேவஸ்தான வருடாந்த மகோற்சவ முன்னாயத்தங்கள்

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத தேவஸ்தான வருடாந்த மகோற்சவ  முன்னாயத்தங்கள்


வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆலயம் புது மெருகூட்டப்பட்டு வருகின்றது. இளைஞர்கள் புது வர்ணங்களைாலும், மின்சார விளக்குகளாலும் அலங்கரித்து வருகின்றனர்.



இளைஞர்கள் வர்ணம் தீட்டும் காட்சிகள்


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயு தேவஸ்தான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயு தேவஸ்தான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2012

தமிழ், சிங்கள் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் விஞ்ஞாபனத்தினை,

மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருவாளர். க.விஜேந்திரன் அவர்களும்,
மன்னம்பிட்டி சமூர்த்தி அதிகாரி திருவாளர். பு.யுகானந்தராசா அவர்களும் இணைந்து அச்சிட்டு வழங்கியுள்ளனர்.



சிங்கள விஞ்ஞாபனத்தினைச் சொறுவில் கிராம மக்கள் இணைந்து அச்சிட்டு வழங்கியுள்ளனர்.



மன்னம்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த சடங்கு உட்சவம்

மன்னம்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த சடங்கு உற்சவம் கடந்த 29.06.2012 தொடக்கம் 03.07.2012 அன்றுவரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இச் சடங்கு உற்சவம் தொடர்பான சில படங்கள் உங்கள் பார்வைக்கு



ஆலயத்தின் வருடாந்த சடங்கு உட்சவத்திற்கான முகப்புப் பதாதை




புதன், 27 ஜூன், 2012

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத் திருவிழா - 2012

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்ஷவம் கடந்த 25.06.2012 அன்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஊர்மக்கள் அனைவரும் ஸ்ரீ சித்திவிநாயகரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

திருவிழாவின் சிறப்பம்சமாக விநாயகர் ஊர்வலம் இடம்பெற்றது. மறுநாள் 26ம் திகதி தீர்த்தம், அன்னதானம் என்பனவற்றுடன் வருடாந்த உற்ஷவம் இனிதே நிறைவுற்றது. இவை தொடர்பான படங்களை் கீழே தரப்பட்டுள்ளன.




சனி, 7 ஏப்ரல், 2012

சேவைநலன் பாராட்டு விழா



ஓய்வு பெற்ற அதிபர் திருவாளர். க. கனகராஜா ஐயா அவர்களுக்கு மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்து நடத்திய சேவைநலன் பாராட்டுவிழா நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு.




சேவை நலன் பாராட்டுவிழாப் பதாதை