Pages

சனி, 15 செப்டம்பர், 2012

மன்னம்பிட்டி முதல் உகந்தை வரை

பாடசாலையின் இரண்டாம் தவணை விடுமுறையின் போது மன்னம்பிட்டியிலிருந்து உகந்த வரை (உகந்தை முருகன் ஆலயத்திற்குச்) செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

மன்னம்பிட்டியிருந்து பேரூந்தில் கல்முனை வரைச் சென்று அங்கிருந்து வாடகை வண்டியில் சென்றுவந்தேன்.

மன்னம்பிட்டியிலிருந்து அக்கரைப்பற்று பேருந்தில் காலை 5.45க்கு ஏறி 9.30க்கு கல்முனையை அடைந்தேன்.

(எமது பேரூந்துகளில்பயணம் செய்யத் தனித் திறமை வேண்டும். இது பற்றி இன்னமொரு பதிவில் எழுதவுள்ளேன்)

கல்முனையிலிருந்து உகந்தை ( இதனை சிங்கள மக்கள் ஒக்கந்தை என்று கூறுவர்) முருகன் ஆயலயத்திற்னான பயணம் தொடங்கியது. பயணத்தின் போது கிழக்குக் கடற்கரையின் அழகினை பார்த்துக் கொண்டே செல்லக் கூடியதாக இருந்தது.

ஒவ்வொரு ஊரிலும் மக்கள் தங்களுக்குரிய தனித்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். மன்னம்பிட்டி முதல் பானமை வரை சாலை முற்றிலும் சீரமைக்கப்பட்டுக் காணப்பட்டது. ( ஆசியாவின் ஆச்சர்யம் ???) பானமை சென்றதும் எம்மை வரவேற்றது பானமைப் பிள்ளையார் ஆலயம்.


பானமை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வெளித் தோற்றம்.





பானமை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வெளித் தோற்றம்.02


பானமை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதான வாசலின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள்

ஸ்ரீ சித்திவிநாயகரை வழிபட்டு விட்டு உகந்தை நோக்கிய பயணத்தைத் தொடர்வோம். 


பானமையிலிருந்து செல்லும் பொழுது வழியில் காணப்பட்ட ஆலயம். 01. இவ்வாலயத்தில் கதிர்காமத்திற்குச் செல்லும் பக்தரகள் தரித்துச் செல்வதாகக் கூறுகின்றனர்.


பானமையிலிருந்து செல்லும் பொழுது வழியில் காணப்பட்ட ஆலயம். 02



கதிர்காமத்திற்குச் செல்லும் பக்தரகளின் நலன் கருதி விசேட அதிரடிப் படையினர் நீர்க் தாங்கிகளை வைத்துள்ளனர். 

பானமையிலிருந்து மண்பாதையில் தேசிய வனத்தினூடாக(16 கி.மீ.) பயணம் செய்து உகந்தை முருகன் ஆலயத்தினை அடையும் போது எம்மை வரவேற்கப் பொலிஸார் இருந்தனர்.
எம்மை வரவேற்று எத்தனை பேர் வந்தீர்கள்? எங்கிருந்து வந்தீர்கள்? என அன்புடன் விசாரித்ததுடன், சுற்றுப் புறுச் கூழலைப் பாதுகாக்க உதவுமாறும் வேண்டிக் கொண்டனர். 

வண்டியை நிறுத்திவிட்டு காலாற நடந்து சென்நோம். ஆலயத்தின் பின்புறம் எம்மை வரவேற்றது. 

உகந்தை முருகன் ஆலயத்தின் பின்புறம்





உகந்தை ஆலயத்தின் பின்புற வீதி 


உகந்தை ஆலயத்தின் வடக்கு வெளிவீதி


உகந்தை ஆலயத்தின் வெளிவீதி



உகந்தை ஆலயத்தின் வெளிவீதி


உகந்தை ஆலயத்தின் வெளிவீதி


உகந்தை ஆலயத்தின் முன்றலில் தானம் பெறுவோர் வரிசையாக அமர்த்திருந்து பக்கர்களின் தானமாக ( அரிசியைப்) பெற்றுக் கொண்டனர்.


உகந்தை ஆலயத்தின் பிரதான வாயில்


உகந்தை ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் போது அர்ச்சகர்களால் கொடிமரத்திற்கான வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. 


உகந்தை ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் போது அர்ச்சகர்களால் கொடிமரத்திற்கான வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. 


உகந்தை ஆலயத்தின் மூலஸ்தான ( விமானம்) கோபுரம்



உகந்தை ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள வள்ளி மலையில் அமைந்துள்ள வள்ளி ஆலயம்.


உகந்தை முருகனைத் தரிசித்து விட்டு வரும் வழியில் காணப்பட்ட சில காட்சிகள்.

திருப்பத்தில் (பாதை வளைவில் )அமைந்துள்ள இந்த மணிக்கூண்டுக் கோபுரத்தில் எழுதப்பட்டுள்ள வாகத்தினை வாசித்துப் பாருங்கள்.




  ”வேகம் மறணத்தைக் கொண்டுவரும் ” 




சுனாமிக் குடியிருப்பினைப் பாருங்கள் முற்றிலும் மாறுபட்ட அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மறுமுறை சென்றால் வீட்டிற்குள்ளும் சென்று பார்க்க வேண்டும்.


வட்ட வடிவான சுமாமி வீடுகள்


அக்கரைப்பற்றில் அமைக்கப்பட்டுள்ள வளைவுகள் மிக அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கின்றன.


அக்கரைப்பற்றில் அமைக்கப்பட்டுள்ள வளைவுகள் மிக அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கின்றன.

அடுத்த பதிவில் சந்திப்போம்,
நன்றி,
வணக்கம்.


கருத்துகள் இல்லை: