Pages

வெள்ளி, 26 அக்டோபர், 2012

இலகுவாகத் தமிழில் எழுத உதவும் ஒரு மென்பொருள் NHM Writer



வலைப்பூ ( Blogspot) , பேஸ்புக் ( Facebook) போன்றவற்றில் இலகுவாகத் தமிழில் எழுத உதவும் ஒரு மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம்.

 Google, Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.



இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

வின்டோஸ் XP/2003 , Vista , Win 7 ஆப்ரேடிங் சிஸ்டங்களில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.

( நான் தற்போது இப் பதிவினை எழுதிக் கொண்டிருப்பது windows 7 இல் ஆகும்)



இம் மென்பொருளின் பெயர் NHM Writer ஆகும்,

இதன் இணையத்தள முகவரி

http://software.nhm.in/products/writer



(கணினி அறிவு குறைந்தவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிதாகப் படங்களின் உதவியுடன் விளக்கியுள்ளேன்) 






இங்கு சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.



இதனைப் பயன்படுத்துவது மிகமிக எளிது. இணையத்தில் கிடைக்கும் இம் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். 

உங்களுக்கு பாமினி, கலகம்,பூபாளம், கிழவி, ரவி, போன்ற எழுத்துருக்களில்  அல்லது வேறு தமிழ் எழுத்துருக்களில் தட்டச்சு செய்ய முடியுமாயின் இந்த மென் பொருளின் உதவியுடன் மிக எளிதாக இனி இணையத்தில் உங்கள் கருத்துக்களைத் தமிழிலேயே வெளிப்படுத்தலாம்.


இம் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி எவ்வாறு செயல்படுத்துவது எனப் படங்களின் உதவியுடன் பார்ப்போம்.

நீங்கள் தரவிறக்கிய NHM Writer Setup  பைல் கீழுள்ள வண்ணம் காணப்படும் அதனை இரு முறை Click  செய்யுங்கள்




மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவத் தொடங்கி உங்களது அனுமதியைக் கேட்டு நிற்கும்.

நீங்கள் Next என்னும் பொத்தானை அழுத்தி அனுமதி கொடுங்கள்

உடனே நிறுவனத்தின் சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்கின்றீர்களா என வினவும். அதற்கு ஏற்றுக் கொள்கின்றேன் (I accept the agreement) என்பதைத் தெரிவு செய்து Next  ஐ அழுத்தவும்.

மென்பொருளை நிறுவ வேண்டிய இடத்தினை வினவும் நீங்கள்Next என்பதனை அழுத்தவும்
அடுத்து மொழியைத் தெரிவு செய்யச் சொல்லும் திரை அடுத்து தோன்றும்

அத் திரையில் காணப்படும் கீழ் நோக்கிய அம்புக் குறியை அழுத்தி Tamil என்பதனைத் தெரிவு செய்யவும்.


தமிழைத் தெரிவு செய்து Next ஐ அழுத்தவும்.
 Next ஐ அழுத்தவும்
உங்களது கணினியின் முகப்பில் NHM  இன் குறுக்குச் சின்னம் (Shortcut) இருக்க வேண்டுமாயின் Create a desktop icon )என்பதனைத் தெரிவு செய்யவும்.
தெரிவு செய்ததும் Install  என்பதனைக் கொடுத்தால் உங்களி கணினியில் மென்பொருள் நிறுவப்படத் தொடங்கும்.
மென்பொருள் நிறுவப்பட்டதும் மென் பொருளை ஆரம்பிக்கவா என வினவும். நீங்கள் Finish என்பதனைக் கொடுங்கள்.

இப்போது உங்கள் கணினியில் மென்பொருள் நிறுவப்பட்டுவிட்டது. இனி அதனை இயக்கிப் பயன்படுத்தும் முறையினைப் பார்ப்போம்.
கணினியில் மென்பொருள் நிறுவப்பட்டதும் அதன் சின்னம் (மணி)உங்கள்
Task barஇல் வந்து அமர்ந்து கொள்ளும். ( வின்டோஸ் 7 இல் மொழிக்கு அருகில் உள்ள மேல் நோக்கிய அம்புக் குறியை கிளிக் செய்து பெற்றுக் கொள்ள வேண்டும், ஏனையவற்றில் மணியைக் கிளிக் செய்து கொள்ளவும்) 


மணியைக் கிளிக் செய்ததும் கீழுள்ள தெரிவு தோன்றும்


இத் தெரிவில் இரண்டாவதைத் தெரிவு செய்யவும்.  (Alt + 4 என்பது இதன் குறுக்கு வழி) 


தெரிவு செய்ததும் மணி செம்மஞ்சல் நிறத்தில் காணப்படும். இவ்வாறு செம்மஞ்சல் நிறத்தில் காணப்பட்டால் மென்பொருள் செயல்படத் தொடக்கிவிட்தென்பதைத் தெரிந்து கொள்ளவும்.

இனி தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வதெனப் பார்ப்போம்....


இப்போது வேட்டினைத் திறந்து கொள்ளுங்கள்.
(நான் இங்கு வேட்டினைத் திறந்துள்ளேன்)



jkpo; என (தமிழ்) என தட்டச்சு செய்யுங்கள்

( இப்போது மென் பொருள் இயங்கவில்லை என்பதனைக் கருத்தில் கொள்ளுங்கள்)



இப்போது மென் பொருள் இயங்கத் தொடங்கிவிட்டது ( செம்மஞ்சல் நிற மணி காணப்படுகின்றது)

மென்பொருள் இயங்குகின்றது என தெரிந்து கொண்டதும் தமிழ் என தட்டச்சு செய்யவும் தமிழில் தட்டச்சாவகைக் காண்பீர்கள்.


இனி உங்கள் விருப்பம் போல விரும்பிய இணைய தேடு பொறிகளில் தமிழில் தேடிப் பார்க்கலாம், வலைப்புக்களில் தமிழில் எழுதலாம்.

ஒரு முறை மன்னம்பிட்டி என நமது கிராமத்தின் பெயரைக் கொடுத்து தேடிப் பாருங்கள். வரும் முடிவுகளைக் கண்டு அசந்து போய்விடுவீர்கள்.







இந்த மென்பொருளை உருவாக்கியவர்களுக்கும், இதனை இணையத்தின் மூலம் பதிவிறக்கிப் பய்ன்படுத்த அனுமதி அளித்த அனைவருக்கும், இதனை இன்னும் திருத்தியமைக்க முயற்சிக்கும் கணினி வல்லுனர்களுக்கும் எனதும், தமிழ் மக்களினதும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

உங்கள் தமிழ்ப் பணி தொடர வாழ்த்துக்கள்.

இன்னும் இம் மென்பொருளைப் பற்றியும் அதனைஉங்கள் கணினியில் நிறுவும் வழிமுறையைத் தெரிந்து கொள்ளவும்,

http://blog.zquad.in/2008/10/nhmwriter.html என்னும் முகவரிக்குச் சென்று பாருங்கள்.


இந்த நீண்ட பதிவினை படித்த உங்களுக்கு நன்றி, வணக்கம்.










1 கருத்து:

adslmpt@gmail.com சொன்னது…

தமிழில் எப்படி எழுதுவது எனத் தவித்த எனக்கு உங்கள் பதிவு மிக உதவியாக இருந்தது.

உடனடியாகத் தரவிறக்கி நிறுவிப் பயன்படுத்துகின்றேன்.

தமிழர் நாம் தமிழைத் தமிழில் எழுதுவோம்.

அன்புடன்,
ADSL