“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” விழா
அதிபர் , ஆசிரியர்களின் அன்பான அழைப்பை ஏற்றுக் கொண்ட விசேட விருந்தினர்கள், மாணவர்களை மகிழ்விக்க வருகைதந்திருந்தன்ர்.
விழாவின் ஆரம்பமாக பிரதம விருந்தினர்கள் மாணவர்களால் வரவேற்கப் பட்டனர்.
முதலில் மங்கள விளக்கேற்றல் இடம் பெற்றது. விளக்கினை ஏற்றியோர் விபரம்- (வலமிருந்து இடமாக) கேபட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.நிமால் பண்டார அவர்கள்,திம்புலாகலை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் அவர்கள், முன்னாள் அதிபர் திரு.க.கனகராஜா அவர்கள், பாடசாலை அதிபர் திரு.க.விஜேந்திரன் அவர்கள், “மட்டக்களப்பு வண்ணாத்திப் பூச்சி சமாதானப் பூங்கா” சார்பாக திரு.நகுலன் அவர்கள் மற்றம் பாடசாலை மாணவிகளில் ஒருவரும் மற்றும் பலரும் மங்கள விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தனர்.
வண்ணாத்திப் பூச்சி சமாதானப் பூங்கா குழுவினர் மாணவர்களை மகிழ்விக்கும் காட்சி
மிக ஆர்வமாக வண்ணாத்திப் பூச்சி சமாதானப் பூங்காக் குழுவினரின் நிகழ்ச்சியினைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர்.
சிறுவர்களை மிகவும் கவர்ந்த கரடி- மாணவர்களின் மகிழ்ச்சியினை முகங்களில் காணக் கூடியதாக இருந்தது.
மாணவர்களை ஆடிப் பாடி மகிழ்வித்த வண்ணாத்திப் பூச்சி சமாதானப் பூங்கா குழுவினர் எமது மாணவர்களுக்கு பரிசில்களைம் வழங்கிப் பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றதனைக் காணக் கூடியதாக இருந்தது.
இறுதியாகப் பாடசாலை அதிபர் திரு.க.விஜேந்திரன் அவர்கள் மாணவர்களுக்கு சிறுவர் தினப் பரிசில்களை, வருகை தந்திருந்த அனைத்து மாணவர்களுக்கும் வழக்கி வைத்ததும் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
எமது கிராமத்திற்க வருகை தந்து சிறுவர்தினத்தில் சிறுவர்களை மகிழ்வித்த மட்டக்களப்பு “வண்ணாத்திப் பூச்சி சமாதானப் பூங்காக் குவினருக்கு” பழைய மாணவர்கள் சார்பிலும், பெற்றோர் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் உங்களது பணி தொடரப் பிராத்திக்கின்றோம்.
நன்றி
வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக