Pages

புதன், 27 ஜூன், 2012

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத் திருவிழா - 2012

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்ஷவம் கடந்த 25.06.2012 அன்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஊர்மக்கள் அனைவரும் ஸ்ரீ சித்திவிநாயகரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

திருவிழாவின் சிறப்பம்சமாக விநாயகர் ஊர்வலம் இடம்பெற்றது. மறுநாள் 26ம் திகதி தீர்த்தம், அன்னதானம் என்பனவற்றுடன் வருடாந்த உற்ஷவம் இனிதே நிறைவுற்றது. இவை தொடர்பான படங்களை் கீழே தரப்பட்டுள்ளன.




இவ் வருடம் தமது வேண்டுதலை நிறைவேற்ற செல்வன். என்.கே.வினோத் அவர்கள் ஸ்ரீ சித்திவிநாயகரின் ஊர்வலத்திற்காக முத்துச் சப்பறத்தின் செலவினைப் பெறுப்பேற்று. அதனை நிறைவேற்றினார்.

செல்வன். என்.கே.வினோத் அவர்களும் அவரது சகோதரர் . என். லக்க்ஷான் அவர்களும் முத்துச் சப்பறத்தின் அருகில் காணப்படுகின்றனர்.



வீதி உலா வருவதற்கான வழிபாடுகள் இடம் பெறுகின்றன. அடியவர்கள் எம்பெருமானைத் தரிசிக்கின்றனர்.




வீதி உலாவிற்காக அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்பறத்தின் எழில் தோற்றம்



அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்பறத்தில் ஸ்ரீ சத்திவிநாயகர் வீதி உலாவிற்குத் தயாராகும் காட்சி




அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்பறத்தில் ஸ்ரீ சத்திவிநாயகர் பக்தர்கள் புடைசூழ வீதியுலா வரும் காட்சி



தமது வீடுதேடி அருள் பாலிக்கவரும் ஸ்ரீ சித்திவிநாயகரை வரவேற்க வீடுகளில் வைக்கப்பட்டிருந்த நிறைகுடங்களில் ஒன்று.



திருவாளர் சகிக்குமார் அவர்கள் தனது குடும்பத்தினருடன் நிறைகுடம் வைத்து எம் பெருமானின் அருளைப் பெறக் காத்துக் கொண்டிருக்கின்றார்.





திருவாளர் நாகராசா அவர்கள் தனது குடும்பத்தினருடன் நிறைகுடம் வைத்து எம் பெருமானின் அருளைப் பெறக் காத்துக் கொண்டிருக்கின்றார்.







திருவாளர் கிருபாணந்தராஜா அவர்கள் தனது குடும்பத்தினருடன் நிறைகுடம் வைத்து எம் பெருமானின் அருளைப் பெறக் காத்துக் கொண்டிருக்கின்றார்.





திருவாளர் பாஸ்கரன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் நிறைகுடம் வைத்து எம் பெருமானின் அருளைப் பெறக் காத்துக் கொண்டிருக்கின்றார்.




மன்னம்பிட்டி பொது வைத்தியசாலை பிரதம வைத்திய அதிகாரி அவர்களும், அங்கு கடமை புரியும் ஊழியர்களும் எம் பெருமானின் அருளைப் பெறக் காத்திருக்கின்றனர்.



இல்லங்களில் வைக்கப்பட்டிருந்த நிறைகுடங்களில் இருந்த நீர் ஸ்ரீ சித்திவிநாயகர் வீதி உலா சென்று கொண்டிருக்கும் பாதையில் அர்ச்சகரால் சொரியப்படுகின்றது.



கிராமத்து இளைஞர்களால் ஸ்ரீ சித்திவிநாயகர் வீதி உலா சென்ற வீதியில் பல்வேறு விதமான வான வெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன. படம் - 1



கிராமத்து இளைஞர்களால் ஸ்ரீ சித்திவிநாயகர் வீதி உலா சென்ற வீதியில் பல்வேறு விதமான வான வெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன. படம் - 2




கிராமத்து இளைஞர்களால் ஸ்ரீ சித்திவிநாயகர் வீதி உலா சென்ற வீதியில் பல்வேறு விதமான வான வெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன.  படம் - 3



அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்பறத்தில் ஸ்ரீ சத்திவிநாயகர் பக்தர்கள் புடைசூழ வீதியுலா வரும் காட்சி 



மறுநாள் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தில் கலந்து கொண்டோரில் சிலர் உண்ணும் காட்சி. - 1


அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தில் கலந்து கொண்டோரில் சிலர் உண்ணும் காட்சி. - 2



மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்ஷவம் இனிதே நிறைவேற உதவிய அனைவருக்கும் நன்றி, வணக்கம்.

நன்றி.

கருத்துகள் இல்லை: