Pages

வெள்ளி, 26 ஜூன், 2015

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 நிறைவு - பாராட்டு

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 நிறைவு தினத்தன்று  திருவிழாவினைச்  சிறப்புற நடத்திக் கொடுத்த பிரம்ம ஸ்ரீ  சுதர்சன் சர்மா அவர்களுக்கும் பிரம்ம ஸ்ரீ  நிரோஜன்  சர்மா அவர்களுக்கும் பூசகர் குழந்தைவேல்   அவர்களுக்கும் பாராட்டும் பொன்னாடை சூடிக்   கௌரவித்தலும் ஆலய நிர்வாக சபையினரால் நடத்தப்பட்டது.


பிரம்ம ஸ்ரீ   சுதர்சன் சர்மா அவர்களுக்கு ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு.ப.தவரூபன் அவர்கள்  பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கின்றார்.



முன்னாள் அதிபர் திரு.க.ராசநாயகம் அவர்கள்  பிரம்ம ஸ்ரீ   சுதர்சன் சர்மா அவர்களுக்கு பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கின்றார்.


தற்போதைய  அதிபர் திரு.க.விஜேந்திரன்  அவர்கள்  பிரம்ம ஸ்ரீ   சுதர்சன் சர்மா அவர்களுக்கு பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கின்றார்.


பிரம்ம ஸ்ரீ   சுதர்சன் சர்மா அவர்களுக்கு பிரம்ம ஸ்ரீ  நிரோஜன் சர்மா அவர்கள்  தீபாரனை காட்டிக்  கௌரவிக்கின்றார்.


பிரம்ம ஸ்ரீ  நிரோஜன் சர்மா அவர்களுக்கு ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு.ப.தவரூபன் அவர்கள்  பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கின்றார்.


காளி கோயில் பூசகர் குழந்தைவேல் ஐயா  அவர்களுக்கு ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு.ப.தவரூபன் அவர்கள்  பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கின்றார்.


அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 நிறைவு தினத்தன்று  திருவிழாவினைச்  சிறப்புற நடத்திக் கொடுத்த பிரம்ம ஸ்ரீ   சுதர்சன் சர்மா அவர்களை  ஆலய பரிபாலன சபைத் தலைவர் அவர்களும் இளைஞர்களும்  கரங்களில் ஏந்தி ஆலயத்தினை  வலம் வந்து கௌரவப்படுத்தினர்.





அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 சிறப்புற  நடத்த முன்றின்று உழைத்த அலய நிர்வாக சபையினர்.
( திரு.ந.கவின் வினோத் அவர்கள், திரு.க. குலசூரிய அவர்கள், 
திரு.ப. தவரூபன்  அவர்கள்,  திரு.க.தினேஸ்  அவர்கள், திரு.பு.திவாகர்  அவர்கள்) 

இவர்களுடன்   பிரம்ம ஸ்ரீ   சுதர்சன் சர்மா அவர்களும்  பிரம்ம ஸ்ரீ   நிரோஜன் சர்மா அவர்களும்,  ஆலய உதவியாளரும் உள்ளனர்.


திருவிழா இனிதே நடைபெற உதவிய அனைவருக்கும் எம் பெருமான் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் புரிவாராக.





கருத்துகள் இல்லை: