அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 இல் பூங்காவனத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பூங்காவனத் திருவிழாவிற்கென அழகாக அலங்கரிக்கப்பட்ட மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் சயனத்திலிருக்கும் காட்சி.
ஆலய முன்றலில் விசேடமாக அமைக்கப்பட்ட இல்லத்தில் சயனத்திருந்து அருள் பாலிக்கும் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர்.
( படம் இரவில் தொலைவிலிருந்து எடுக்கப்பட்டதால் தெளிவில்லை)
பூங்காவனத் திருவிழா உபயகாரர் திரு. த.அமிர்தலிங்கம் குடும்பத்தினர். பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களுடன்.
பூங்காவனத் திருவிழா பற்றி ஆலயத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கு விளக்கமளிக்கின்றார் பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள்.
சயனத்திலிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகருக்கு சாமரம் வீசுகின்றார், சித்திர வேலாயத சுவாமி ஆலய பொருளாலர் திரு. க.இந்திரராஜா அவர்கள்.
பூங்காவனத் திருவிழா குருக்கள் “பிரம்ம ஸ்ரீ சுதர்சன் சர்மா“ அவர்களுக்கும் “பிரம்ம ஸ்ரீ நிரோஜன் சர்மா“ அவர்களுக்கும் திருவிழா உபயகாரர் தட்சனை வழங்குகின்றனர்.
அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக