Pages

வெள்ளி, 26 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014


மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  ஏழாம்  நாள் ( 26.12.2014) |
Manampitiya Floods -December 2014  Seventh  Day ( 26.12.2014)


 மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014   பகுதி  II  | Manampitiya Floods   Part- II

மன்னம்பிட்டி மகாவலி கங்கை முதல் கல்லலை வரை காணொளியைப் பாருங்கள்.......


மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014   பகுதி  II  | Manampitiya Floods   Part- II
இணைப்பு:  https://www.youtube.com/watch?v=3o_4LxcwMVM



இரவு தொடர்ச்சியாக மழை பெய்யதாலும், பல அணைக்கட்டுக்களின் மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாலும் மன்னம்பிட்டியில் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

 
 
 
மன்னம்பிட்டி நகரின்  ஒரு பகுதி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
( மன்னம்பிட்டி- மட்டக்களப்ப வீதி )

 
 
மன்னம்பிட்டி நகரின்  ஒரு பகுதி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
( மன்னம்பிட்டி- மட்டக்களப்ப வீதி )
 
 
மன்னம்பிட்டி நகரின்  ஒரு பகுதி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
( மன்னம்பிட்டி- பொலன்னறுவை வீதி )


 
மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் புகையிரதம் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளது.  ஆனால், பெருமளவானோர் பயணத்தைத் தவிர்து வீடுகளில் இருப்பதால் மன்னம்பிட்டி நகரம் வெறிச்சோடியே காணப்படுகின்றது.
 
 
வெறிச்சோடிக் காணப்படும் மன்னம்பிட்டி நகரம்

 
காலையில் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் யுவதிகள் வேலைக்குச் செல்லமுடியாமல் நகரில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்.
 
 
 
பல வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. பாதிக்கப்பட்டோர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளைத் தோணிகளில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
 
 
மன்னம்பிட்டி பள்ளிவாசல் நீரில் மூழ்கியுள்ளது.


 


மன்னம்பிட்டி நகரில் காணப்படும் புகையிரதப் பாதை நீரில் மூழ்கியுள்ளது.
 
 
 
இன்று மாலையும் நீர் வரத்து அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளின் மின் இணைப்புக்கள் இன்னும் துண்டிக்கப்படவில்லை. அதனால்,  வெகு விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் காணப்டுகின்றது.  




 
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள் - 01

 
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள் - 02

 
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள் - 03

 
பழைய ஊருக்குச் செல்லும் வீதி நீரால் மூடப்படட்டுக் கொண்டிருக்கும் காட்சி.
 
தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டு செல்வதால் மக்கள்  இடம் பெயர்ந்து  கொண்டிருக்கின்றனர்.
 
 
 

கருத்துகள் இல்லை: