நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையின் காரணமாக ஏ 11 ( A11) வீதியில் மன்னம்பிட்டி முதல் கல்லலை வரையிலான வீதி நீரில் மூழ்கியுள்ளதால் விதிப் போக்குவரத்து இன்று காலை முதல் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. பஸ்வண்டிகள் அனைத்தும் மன்னம்பிட்டி நகரில் தரிந்து நிற்கின்றன.
மன்னம்பிட்டியிலிருந்து கதுருவலை வரையில் இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் “இரயில்பஸ்” சேவையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தாலும் பெருமளவு பயனிகள் புகையிரத நிலையத்தில் காத்திருப்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
எனவே, மட்டக்களப்புக்குப் - பொலன்னறுவை ( A11) ஊடாகப் பயணம் செய்பவர்கள் ஓரிரு நாட்களுக்குத் தங்கள் பயணத்தை மேற்கொள்ளா மலிருப்பது நல்லது.
தவிர்க்க முடியாதவர்கள் மன்னம்பிட்டிவரை பஸ்ஸில் வந்து மன்னம்பிட்டியிலிருந்து கதுருவலை வரை “இரயில்பஸ்” இல் பயணம் செய்து கதுருவலையிலிருந்து மீண்டும் பஸ்ஸில் பயணம் செய்யலாம். இதே போல் ஏனைய இடங்களில் இருந்து வருபவர்களும் பொலன்னறுவையில் இருந்து மன்னம்பிட்டி வரை இரயில் பஸ்ஸில் வந்து மன்னம்பிட்டியிலிருந்து பஸ்ஸில் பயணம் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக