Pages
வெள்ளி, 6 ஜூலை, 2012
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயு தேவஸ்தான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2012
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயு தேவஸ்தான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2012
தமிழ், சிங்கள் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் விஞ்ஞாபனத்தினை,
மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருவாளர். க.விஜேந்திரன் அவர்களும்,
மன்னம்பிட்டி சமூர்த்தி அதிகாரி திருவாளர். பு.யுகானந்தராசா அவர்களும் இணைந்து அச்சிட்டு வழங்கியுள்ளனர்.
சிங்கள விஞ்ஞாபனத்தினைச் சொறுவில் கிராம மக்கள் இணைந்து அச்சிட்டு வழங்கியுள்ளனர்.
மன்னம்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த சடங்கு உட்சவம்
புதன், 27 ஜூன், 2012
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத் திருவிழா - 2012
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்ஷவம் கடந்த 25.06.2012 அன்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஊர்மக்கள் அனைவரும் ஸ்ரீ சித்திவிநாயகரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.
திருவிழாவின் சிறப்பம்சமாக விநாயகர் ஊர்வலம் இடம்பெற்றது. மறுநாள் 26ம் திகதி தீர்த்தம், அன்னதானம் என்பனவற்றுடன் வருடாந்த உற்ஷவம் இனிதே நிறைவுற்றது. இவை தொடர்பான படங்களை் கீழே தரப்பட்டுள்ளன.
சனி, 7 ஏப்ரல், 2012
வெள்ளி, 4 பிப்ரவரி, 2011
மன்னம்பிட்டியில் வெள்ளம் (04.02.2011) Manampitiya Flood -04.02.2011
இன்ற மன்னம்பிட்டியில் நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. நேற்றுடன் ஒப்பிடுகையில் புதிய பகுதிகளையும் வெள்ள நீர் தனதாக்கிக் கொண்டது. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிலர் புகையிரதப் பாதையால் நடந்து சென்று பொலன்னறுவையை அடைந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பலர் ஏமாற்றத்துடன் வீட்டுக்குச் சென்றனர்.
இன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.
சிலர் புகையிரதப் பாதையால் நடந்து சென்று பொலன்னறுவையை அடைந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பலர் ஏமாற்றத்துடன் வீட்டுக்குச் சென்றனர்.
இன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.
மன்னம்பிட்டி புகையிரத நிலையம் (03.02.2011)
புதன், 2 பிப்ரவரி, 2011
மன்னம்பிட்டியில் மீண்டும் வெள்ளம் (02.02.2011) Manampitiya Flood -02.02.2011
இன்று (02.02.2011) காலை முதல் பொலன்னறுவைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையிலான வாகனப் போக்குவரத்து ( A11வீதியில்) காலை முதல் தடைப்பட்டுள்ளது. வெள்ளம் மாலைவரை அதிகரித்துக் கொண்டே சென்றது.
மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் புகையிர சேவை இடம் பெறுவதால் பயணிகள் வெள்ளம் தேங்கியுள்ள 10 கிலோமீட்டர் தூரத்தினைப் பகையிரதத்தில் கடக்கின்றனர்.
மன்னம்பிட்டி வரையில் ஏனைய பிரதேசங்களில் இருந்து வரும் பேரூந்துகள் ( பஸ் வண்டிகள்) புகையிரதத்தில் வரும் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
வெள்ளம் தொடர்பான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக கீழே உள்ளன.

மன்னம்பிட்டி நகரில் தரித்து நிற்கும் பஸ்வண்டிகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)