Pages

திங்கள், 22 ஜூன், 2015

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 ( மூன்றாம் நாள் )

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015

 ( மூன்றாம் நாள் )


இன்று சித்திவிநாயகர் அம்பாளுடன் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தார்.



சித்திவிநாயகர்



அம்பாள்



3ம் நாள் திருவிழா உபயம்  மன்னம்பிட்டி ஊர் மக்கள்., காலையில் சங்காபிசேகம் நடைபெற்றது. 



திம்புலாகலை பிரதேச  சபையின் அனுசரணையுடன்  தண்ணீர் தெளித்து  வெளி வீதியைச் சுத்தம் செய்தனர்.


கிராமத்துப் பெண்கள் அன்னதானத்திற்கான சமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இளைஞர்கள் வேட்டைத் திருவிழாவிற்காக வெளி வீதியில் அலங்காரங்களில் ஈடுபட்டனர்.



இளைஞர்கள் வேட்டைத் திருவிழாவிற்காக வெளி வீதியில் அலங்காரங்களில் ஈடுபட்டனர்.

இரவு சித்திவிநாயகர் அம்பாளுடன் வேட்டைக்குச் சென்றார்.



இரவு சித்திவிநாயகர் அம்பாளுடன் வேட்டைக்குச் சென்றார்.


வேட்டைத் திருவிழாவினை சுதர்சன் சர்மா அவர்களும் நிரோஜன் சர்மா அவர்களும் சிறப்பாக நடத்தி வைத்தனர். 


வேட்டைத் திருவிழாவினை சுதர்சன் சர்மா அவர்களும் நிரோஜன் சர்மா அவர்களும் சிறப்பாக நடத்தி வைத்தனர். 


வேட்டை முடித்து ஆலயத்திற்கு  சித்தி விநாயகரும் அம்பாளும் திரும்பியதும், அன்னதானம் நடை பெற்றது.


திருவிழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரும் அன்னதானத்தில் பங்கு கொண்டனர். 


அன்னதானத்தில் கலந்து கொண்டவர்கள்..... 01


அன்னதானத்தில் கலந்து கொண்டவர்கள்..... 02



அன்னதானத்தில் கலந்து கொண்டவர்கள்..... 03


அன்னதானத்தில் கலந்து கொண்டவர்கள்..... 004


அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.

ஞாயிறு, 21 ஜூன், 2015

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 ( இரண்டாம் நாள் )



2ம் நாள் திருவிழா உபயம் P.முத்துக்குமார்  குடும்பம், I. சிவபாதநாயகம்  குடும்பம், ஆகிய இரு குடும்பத்தினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.




காலையில் சங்காபிசேகம் நடைபெற்றது. 2ம் நாள் திருவிழா உபயகாரர் திரு.S.பாலச்சந்திரன் திருவிழாவில் பங்கேற்கும் சிவாச்சாரியர்களுக்கு  தட்சணை வழங்குகின்றார்.


இரவு  மாம்பழத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ சித்தி விநாயகர் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015



அருள்மிகு  ஸ்ரீ  சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் நேற்று புண்ணியாகவசம், தேவப்பிரமான அனுக்ஞை, வாஸ்துசாந்தி என்பனவற்றுடன் ஆரம்பமாகியது.

1ம் நாள் திருவிழா உபயம் K.கருணாரெட்ணம் குடும்பம், K.இந்திரராஜா குடும்பத்தினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.




.

காலையிலேயே ஆலயம் மாவிலை தோரணங்களால் அலங்கலரிக்கப்பட்டது


பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை  நிறைவேற்றினர்.


பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை  நிறைவேற்றினர். சித்திவிநாயகருக்கு திரு. திருமதி. கனகராஜா குடும்பத்தினர் ஒரு அழகிய திருவாசி ஒன்றினை வழங்கினர்.


காலையில் சங்காபிசேகம் நடைபெற்றது. 1ம் நாள் திருவிழா உபயகாரர் திரு.K.இந்திரராஜா அவர்கள் சங்கற்பத்திற்காக அமர்ந்திரக்கின்றார்.


காலையில் சங்காபிசேகம் நடைபெற்றது. 1ம் நாள் திருவிழா உபயகாரர்கள் 

காலையில் சங்காபிசேகம் நடைபெற்றது.


மாலையில் கொடியை எடுத்து வருவதற்காக திருவிழா உபய காரரும் ஊர் மக்களும் மன்னம்பிட்டி கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் செல்கின்றனர்.



திருவிழா உபயகாரர்கள் கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து கொடியினை எடுத்து வருகின்றனர். 


திருவிழா உபயகாரர்கள் கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து கொடியினை எடுத்து வருகின்றனர். 


திருவிழா உபயகாரர்கள் கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து கொடியினை எடுத்து வருகின்றனர். 


எடுத்துவரப்பட்ட கொடியினை  நிரோஜன் சர்மா அவர்களிடம் கையளிக்கின்றனர்.


திருவிழா உபயகாரர்கள் 


திருவிழாவின் தொடக்கமாக சுதர்சன் சமர்மா அவர்கள் கொடியினை ஏற்றி வைக்கின்றார்.


திருவிழாவின் தொடக்கமாக சுதர்சன் சமர்மா அவர்கள் கொடியினை ஏற்றி வைக்கின்றார்.


திருவிழாவின் தொடக்கமாக சுதர்சன் சமர்மா அவர்கள் கொடியினை ஏற்றி வைக்கின்றார்.


 கொடியேற்றத்தில் கலந்து கொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினர்.



கொடிமரத்திற்கு பக்தர்கள் நவதானியம் இட்டு வழிபடுகின்றனர்.


கொடியேற்றம் நிறைவுற்றதும் எலி வாகனத்தில் வெளி வீதி வலம் வந்து பக்கதர்களுக்கு அருள் பாலித்தார்.


ஆலய நிர்வாகத்தினருக்கும், அலய பரிபாலன சபையினருக்கும்,  திருவிழா உபய காரர்களுக்கும், முருகன் ஆலய சபைத் தலைவர். திருவாளர். க. கனகராஜா அவர்களுக்கும் காளாஞ்சி வழக்கி,  கௌரவிக்கப்படப்டனர். 


அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.





சனி, 20 ஜூன், 2015

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் - 2015


அருள்மிகு  ஸ்ரீ  சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவ ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  உற்சவ விஞ்ஞாபனம் - 2015,  திரு. K.திவாகர் அவர்களால் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.  உற்சவகால நிகழ்வுகளுக்கு கீழுள்ள விஞ்ஞாபனத்தைப் பார்க்கவும்.

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் - 2015 ஐ  http://paarungkal.blogspot.com/2015/06/2015.html   என்ற இணைப்பில் பார்க்கவும்.

புதன், 20 மே, 2015

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் உச்சவ மூர்த்தி

 
 
 
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்
 
 
 
 
 

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் நீண்ட காலக் குறையாகக் காணப்பட்ட உச்சவ மூத்தி  இல்லை என்ற குறை, சிவ ஸ்ரீ  சுதர்சன் சர்மா அவர்களின் பெரு முயற்சியினால் இன்றுடன்  நீங்கியுள்ளதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
 
 
 

இன்று மாலை மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திற்கு வருகை தந்த குருணாகல் வர்த்தகர்  கே.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் தலைமையிலான  திரு. கிருபாகரன் அவர்களும், திரு. விமலதாஸ்அவர்களும், திரு சஞ்ஜேய் அவர்களும் ( வர்த்தகர்கள்)  இணைந்து  இந்தக் குறையினை நிவர்த்தி செய்துள்ளனர்.
 
 
ஆலய நிர்வாக சபையினரிடம் வருகை தந்த குருணாகல் வர்த்தகர் திரு கே. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள்  விநாயகர் சிலையினைக் கையளிக்கின்றார்.
 




குருணாகல் வர்த்தகர்கள் இணைந்து எமது ஆலயத்திற்கு வழங்கியுள்ள உச்சவ மூர்த்தியின் அழகுத் தோற்றம்.


 
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இறை வழிபாடுகள் இடம் பெற்றன.

 
வருகை தந்த குருணாகல் வர்த்தகர் திரு. கே. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு   சிவ ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் பிரசாதம் வழங்குகின்றார்.

 
வருகை தந்த குருணாகல் வர்த்தகர் திரு. கிருபாகரன் அவர்களுக்கு   சிவ ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் பிரசாதம் வழங்குகின்றார்.

 
வருகை தந்த குருணாகல் வர்த்தகர் திரு. விமலதாஸ் அவர்களுக்கு   சிவ ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் பிரசாதம் வழங்குகின்றார்.

 
வருகை தந்த குருணாகல் வர்த்தகர் திரு. சஞ்ஜேய் அவர்களுக்கு   சிவ ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் பிரசாதம் வழங்குகின்றார்.
 
எமது ஆலயத்தின் நீண்டநாள் குறையைப் போக்கிய குருநாகல் வர்த்தகர்களுக்கு ஆலய நிர்வாக சபையினர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.
 
 
குருணாகல் வர்த்தகர் திரு. கே. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு   ஆலய நிர்வாகசபைத் தலைவர் திரு.ப.ரூபன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றார்.
 

 
குருணாகல் வர்த்தகர் திரு. கிருபாகரன் அவர்களுக்கு    திரு. நாதன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றார்.

 
குருணாகல் வர்த்தகர் திரு. விமலதாஸ்  அவர்களுக்கு   ஆசிரியர் திரு. சுதாகர் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றார். - 1

 
குருணாகல் வர்த்தகர் திரு. விமலதாஸ்  அவர்களுக்கு   ஆசிரியர் திரு. சுதாகர் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றார். - 2

 
குருணாகல் வர்த்தகர் திரு. சஞ்ஜேய் அவர்களுக்கு   ஆலய நிர்வாக சபை  பொருளாலர் திரு. க. குலசூரிய  அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றார்.
 
 

 குருணாகல் வர்த்தகர் திரு. கே. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு ஆலய நிர்வாக சபையினரின் சார்பில் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.

 
 
 
உச்சவ மூர்த்தியை வழங்கிய குருணாகல் வர்த்தகர்களுக்கும்,
கலந்து கொண்ட அடியார்களுக்கும் எம்பெருமான ஸ்ரீ சித்தி விநாயகர் அருள்பாலிக்க வேண்டுமென  கிராம மக்கள் அனைவரும் இணைந்து பிரா்திக்கின்றோம்.