மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் நீண்ட காலக் குறையாகக் காணப்பட்ட உச்சவ மூத்தி இல்லை என்ற குறை, சிவ ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களின் பெரு முயற்சியினால் இன்றுடன் நீங்கியுள்ளதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
இன்று மாலை மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திற்கு வருகை தந்த குருணாகல் வர்த்தகர் கே.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் தலைமையிலான திரு. கிருபாகரன் அவர்களும், திரு. விமலதாஸ்அவர்களும், திரு சஞ்ஜேய் அவர்களும் ( வர்த்தகர்கள்) இணைந்து இந்தக் குறையினை நிவர்த்தி செய்துள்ளனர்.
ஆலய நிர்வாக சபையினரிடம் வருகை தந்த குருணாகல் வர்த்தகர் திரு கே. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் விநாயகர் சிலையினைக் கையளிக்கின்றார்.
குருணாகல் வர்த்தகர்கள் இணைந்து எமது ஆலயத்திற்கு வழங்கியுள்ள உச்சவ மூர்த்தியின் அழகுத் தோற்றம்.
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இறை வழிபாடுகள் இடம் பெற்றன.
வருகை தந்த குருணாகல் வர்த்தகர் திரு. கே. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு சிவ ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் பிரசாதம் வழங்குகின்றார்.
வருகை தந்த குருணாகல் வர்த்தகர் திரு. கிருபாகரன் அவர்களுக்கு சிவ ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் பிரசாதம் வழங்குகின்றார்.
வருகை தந்த குருணாகல் வர்த்தகர் திரு. விமலதாஸ் அவர்களுக்கு சிவ ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் பிரசாதம் வழங்குகின்றார்.
வருகை தந்த குருணாகல் வர்த்தகர் திரு. சஞ்ஜேய் அவர்களுக்கு சிவ ஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் பிரசாதம் வழங்குகின்றார்.
எமது ஆலயத்தின் நீண்டநாள் குறையைப் போக்கிய குருநாகல் வர்த்தகர்களுக்கு ஆலய நிர்வாக சபையினர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.
குருணாகல் வர்த்தகர் திரு. கே. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு ஆலய நிர்வாகசபைத் தலைவர் திரு.ப.ரூபன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றார்.
குருணாகல் வர்த்தகர் திரு. கிருபாகரன் அவர்களுக்கு திரு. நாதன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றார்.
குருணாகல் வர்த்தகர் திரு. விமலதாஸ் அவர்களுக்கு ஆசிரியர் திரு. சுதாகர் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றார். - 1
குருணாகல் வர்த்தகர் திரு. விமலதாஸ் அவர்களுக்கு ஆசிரியர் திரு. சுதாகர் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றார். - 2
குருணாகல் வர்த்தகர் திரு. சஞ்ஜேய் அவர்களுக்கு ஆலய நிர்வாக சபை பொருளாலர் திரு. க. குலசூரிய அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றார்.
குருணாகல் வர்த்தகர் திரு. கே. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு ஆலய நிர்வாக சபையினரின் சார்பில் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
உச்சவ மூர்த்தியை வழங்கிய குருணாகல் வர்த்தகர்களுக்கும்,
கலந்து கொண்ட அடியார்களுக்கும் எம்பெருமான ஸ்ரீ சித்தி விநாயகர் அருள்பாலிக்க வேண்டுமென கிராம மக்கள் அனைவரும் இணைந்து பிரா்திக்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக