Pages

வியாழன், 25 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014


மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  ஆறாம்  நாள் ( 25.12.2014) |
Manampitiya Floods -December 2014  Sixth Day ( 25.12.2014)


இன்று நீர் மட்டம் குறையும் என அனைவரும் எதிர்பார்த்திருநதனர். ஆனால், இன்று மதியம் முதல் நீர்மட்டம் வெனகு விரைவாக அதிகரிப்பதனைக் காணக் கூடியதாக இருந்துது.

வெள்ளம் தொடர்பான காணொளியைப் பார்க்க.....



மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014   பகுதி  I  | Manampitiya Floods   Part- I

இன்றுடன் ஆறாம் நாளாக வெள்ளம் காணப்பட்டாலும், இன்று நீர் மட்டம் வெகு விரைவாக அதிகரிப்பதனால், இன்னும் பல குடும்பங்கள் அகதிகளாக இடம் பெயர வேண்டி ஏற்பட்டுள்ளது.



 

புதன், 24 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014


மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  ஐந்தாம் நாள் ( 24.12.2014) |
Manampitiya Floods -December 2014  Fifth Day ( 24.12.2014)

இன்று  நீர் மட்டம் குறைந்து கொண்டே சென்றது. ஆனால், வீதிப் போக்குவரத்திற்கு ஏற்ற அளவு நீர் மட்டம் குறையாததால் இன்றும் வீதிப் போக்குவரத்து முன்றிலும் இடம் பெறவில்லை.

பயணிகளின் வசதி கருதி இன்று ஐந்து  பெட்டிகளுடன்  கூடிய இரயில் மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.

ஆனால், மன்னம்பிட்டி முதல்  மட்டக்ளப்பு, கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய இடங்களுக்கு  பஸ்வண்டிகள்  புறப்பட்டுச் சென்றன.

 

செவ்வாய், 23 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014



மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  நான்காம் நாள் ( 23.12.2014) |
Manampitiya Floods -December 2014  Fourth day ( 23.12.2014)

இன்று காலை வரை நீர் மட்டம் குறைந்து கொண்டே சென்றது. ஆனால், மதியம் முதல் மீண்டும் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் வீடுகளுக்குத் திரும்பிய மக்கள் மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.


பயணிகளின் வசதி கருதி இன்று மூன்று பெட்டிகளுடன்  கூடிய இரயில் மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.
 
இரயில் பாதையில் நடந்து செல்லுதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால், புகையிரத நிலையத்தில் மக்கள்  காத்திருந்து பயணம் செய்கின்றனர். 
 
இன்று மட்டக்களப்பிற்கான பஸ் வண்டிகள் மன்னம்பிட்டியிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.  நகரம் வெறிச்சோடியே காணப்பட்டது.
 
 

 
 

திங்கள், 22 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014



மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  மூன்றாம் நாள் ( 22.12.2014) |
Manampitiya Floods -December 2014 Third  day ( 22.12.2014)


இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்யதால்   இன்றும் மன்னம்பிட்டி முதல் கல்லலை வரையிலான வீதி மூடப்பட்டுள்ளது.




பயணிகளின் வசதி கருதி இன்று மூன்று பெட்டிகளுடன்  கூடிய இரயில் மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.



நேற்றம் இன்றும்  வெள்ளம் 01  
( மன்னம்பிட்டி  - பொலன்னறுவை வீதி  ஏ 11 வீதியின்  82 வது கிலோமீற்றர் கல் )


நேற்றம் இன்றும்  வெள்ளம் 02

 ( மன்னம்பிட்டி  -  மட்டக்களப்பு வீதி,  ஏ 11 வீதியின்  83 வது கிலோமீற்றர் கல் )


எனினும்,  இன்று மாலை தொடர்ந்து  மழை பெய்து கொண்டிருப்பதால்  நீர் மட்டம் மிக மெதுவாகவே குறைவதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்  தெரிவித்தனர்.
 
 


 

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014


மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  இரண்டாம் நாள் ( 21.12.2014) |
Manampitiya Floods -December 2014 Second day ( 21.12.2014)

நேற்று இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்யதால் நீர் வரத்து அதிகமாகியதால் இன்றும் மன்னம்பிட்டி முதல் கல்லலை வரையிலான வீதி மூடப்பட்டுள்ளது.
 
 
தடைப்பட்டுள்ள வீதிப் போக்குவரத்திற்காக இரயில்பஸ் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.
 
 
 
அவசர தேவைக்காகப் பயணம் செய்பவர்களே பயணம் செய்கின்றனர்.
 
 
நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
 
 
 
கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நலன்புரி நிலையங்ளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுச் சந்தை

 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்கள்

 
வெள்ளம் நேற்றும் இன்றும்  - 01
 
 
 
மன்னம்பிட்டியினூடாகப் பயணம் செய்பவர்கள் வேறு பாதையில் பயணத்தை மேற்கொள்வது நல்லது.
 

 


 
 
 
 

 

சனி, 20 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014


நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையின் காரணமாக ஏ 11 ( A11) வீதியில் மன்னம்பிட்டி முதல் கல்லலை வரையிலான வீதி நீரில் மூழ்கியுள்ளதால் விதிப் போக்குவரத்து இன்று காலை முதல் முற்றிலும் தடைப்பட்டுள்ளது.  பஸ்வண்டிகள் அனைத்தும் மன்னம்பிட்டி நகரில் தரிந்து நிற்கின்றன.
 
 
 

மன்னம்பிட்டியிலிருந்து கதுருவலை வரையில் இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் “இரயில்பஸ்”  சேவையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தாலும் பெருமளவு பயனிகள் புகையிரத நிலையத்தில் காத்திருப்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.



  மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.



 எனவே, மட்டக்களப்புக்குப்  - பொலன்னறுவை   ( A11) ஊடாகப் பயணம் செய்பவர்கள்  ஓரிரு நாட்களுக்குத் தங்கள் பயணத்தை மேற்கொள்ளா மலிருப்பது  நல்லது.



தவிர்க்க முடியாதவர்கள் மன்னம்பிட்டிவரை பஸ்ஸில் வந்து மன்னம்பிட்டியிலிருந்து கதுருவலை வரை  “இரயில்பஸ்” இல் பயணம் செய்து கதுருவலையிலிருந்து மீண்டும் பஸ்ஸில் பயணம் செய்யலாம். இதே போல் ஏனைய இடங்களில் இருந்து வருபவர்களும் பொலன்னறுவையில் இருந்து மன்னம்பிட்டி வரை இரயில் பஸ்ஸில் வந்து மன்னம்பிட்டியிலிருந்து பஸ்ஸில் பயணம் செய்யலாம்.
 
 








 

சனி, 1 நவம்பர், 2014

சூரன் போர் - 2014 | Sooran Por - 2014



தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் இடம் பெற்ற சூரன் போர் 

( சூர சம்காரம் ) நிகழ்வுகள் உங்களுக்காககப் பாருங்கள்....




இணைப்பு: https://www.youtube.com/watch?v=oUHSAGkLKDo

பாருங்கள்......