Pages

திங்கள், 18 நவம்பர், 2013

கார்த்திகை தீபம் - 2013. Karthigai Deepam 2013


2013.11.17 அன்று மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவேலாயுத சுவாமி ஆலயத்தில்
 
கார்த்தினை தீப விழா சிறப்பாக நடைபெற்றது.  இவ்விழாவானது,
 
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள்  ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை   மரம் நட்டு தென்னோலைகளால்  அதனை சுற்றி அடைத்து  சொக்கப்பானைக்கு  அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபொருமான்   சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.



(கீழே உள்ள மேலும் வாசிக்க... என்பதனை கிளிக் செய்து இன்னும் பல படங்களைப் பாருங்கள்)

வெள்ளி, 8 நவம்பர், 2013

சூரன் போர் -2013 Sooran Poor - 2013

சூரன் போர் -2013


 
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இன்று ( 2013.11.08 )

வெகு சிறப்பாகச் சூரன் போர் நடைபெற்றது. இவ் விழாவானது,  ஆலய

பரிபாலன சபைத் தலைவர் திரு. க.கனகராஜா ஐயா அவர்களின்

வழிநடத்தலுடன், ஆலய நித்திய குருக்கள் பிரம்ம ஸ்ரீ விஜித நாதக் குருக்கள் 

ஐயா அவர்கள் நடத்திவைத்தார்.
 
இன்றைய சூரன் போர் தொடர்பான படங்கள் உங்களுக்காக கீழே
 
இணைக்கப்பட்டுள்ளன....
 
 
(கீழே உள்ள மேலும் வாசிக்க... என்பதனை கிளிக் செய்து இன்னும் பல படங்களைப் பாருங்கள்)  

வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளி வாழ்த்துக்கள் - 2013

அனைவருக்கும்  இனிய தீபாவளி  நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.



அன்புடன்,

www.mannampitiya.blogspot.com

http://www.paarungkal.blogspot.com

 

வியாழன், 31 அக்டோபர், 2013

திருவிளக்குப் பூசை - 2013 படங்கள் ( Photos)



திருவிளக்குப் பூசை - 2013 படங்கள் ( Photos)
திருவிளக்குப் பூசை  - 2013
மன்னம்பிட்டி, ( ஸ்ரீ லங்கா) அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில்
இவ்வருடமும் திருவிளக்குப் பூசை வெகு சிறப்பாக நடைபெற்றது.
உங்களுக்காகச் சில படங்கள்....


 
 


திருவிளக்குப்  வழிபாட்டினை  ஆலய நித்திய பூசகர் திரு. குழந்தைவேல்

ஐயா  அவர்களும், சுதன் சர்மா அவர்களும் நடத்திக்  கொண்டிருக்கின்றனர். 01



ஞாயிறு, 20 அக்டோபர், 2013

திருவிளக்குப் பூசை - 2013. Thiruvilakku Pooja - 2013

திருவிளக்குப் பூசை 

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில்

இவ்வருடமும் திருவிளக்குப் பூசைக்கான ஏற்பாடுகள் அனைத்தும்

நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


   இடம்:     மன்னம்பிட்டி ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலயம்

    நாள் :     வெள்ளிக்கிளமை ( 2013.10.25)

  நேரம் :    மாலை 3.30 மணிக்கு

சுமங்கலிகளும், கன்னிப் பெண்களும் இப் பூசையில் கலந்து கொண்டு

திருவருளைப் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.




 


சனி, 5 அக்டோபர், 2013

இதனை வாசித்து விளக்குங்கள். Please .... Reading .... and Explain ......

இதனை வாசித்து விளக்குங்கள். Please  ....  Reading ....  and   Explain ......




கீழே இணைக்கப்பட்டிருக்கும் சேப்பேட்டுப்  படங்களில் காணப்படும் சொற்களை வாசிக்க முடியுமானவர்கள் தயவு செய்து வாசித்து தற்காலத் தமிழில் விளக்குவீர்கள் ஆனால், எமது ஊரின் ( மன்னம்பிட்டி, ஸ்ரீ லங்கா, Manampitiya, Sri Lanka)  பழமையினை அறிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கும். ( எமது ஊரின் பழமையினை உறுதிப்படுத்தும் ஆதாரங்களில் இதுவும் ஒன்று)



இம் மொழிப் பயன்பாடு எக்காலத்திற்குரியது?



இச் செப்பேடுகளில் என்ன எழுதப்பட்டுள்ளது?


போன்ற விடயங்களை அறியத் தாருங்கள்.....


நீங்கள் ஒரு ஆராய்சியாளராக இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.. உங்கள் ஆராய்ச்சிக்காக இச் செப்பேட்டினை பயன்படுத்த ஏற்பாடு செய்து தருகின்றோம்.

நன்றி,

வணக்கம்.




சனி, 11 மே, 2013

வாழ்த்துக்கள்

 
 
எமது ஊரினைப் பிறப்பிடமாகக் கொண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2011 ) தோற்றிய மாணவர்களுள் மூவர் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றேன்.
 
இவர்களுள்,  மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர் தரத்தில் கற்று சித்தியடைந்த இரு மாணவிகளும், க.பொ.த (சா.த) வரை மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில்  கற்று தனது உயர் கல்வியை (க.பொ.த. உயர் தரத்தினை) வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கற்று சித்தியடைந்த  ஒரு மாணவனும் அடங்குவர்.
 
இவர்களை வாழ்த்தும் அதே வேளை இவர்களுக்கு ஆதாரமாக இருந்த பெற்றோருக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எமது வலைத்தளத்தின் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
 
நன்றி,
வணக்கம்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2013




உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள புதுவருட வாழ்த்துக்கள்....


அன்புடன்,
www.mannampitiya.blogspot.com
 

புதன், 3 ஏப்ரல், 2013

வீதி நாடகம் - நாளை அல்ல இன்றே

தேசிய மொழிகள் மற்றம் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும், நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டமும்  (UN) இணைந்து கிராமங்களில் வீதி நாடகத்தின் மூலம் மக்களுக்கு சட்டத்தினை அறிமுகம் செய்யும் கருத்திட்டத்தின் கீழ் அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தந்தபோது பொலன்னறுவை மாவட்டத்தில்  திம்புலாகலை, வெலிக்கந்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்  வருகை தந்தனர்.

இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர்கள் அடங்கிய மக்கள் கலரி குழுவினரே வீதி நாடகங்களில் நடித்தனர்.



நாளை அல்ல இன்றே பதாதை


திம்புலாகலை பிரதேச செயலாளர் பிரிவில் மன்னம்பிட்டி (எமது கிராமம்), நாமல்பொக்குன, சொறுவில் ஆகிய தமிழ்க் கிராமங்களுக்கும் தழுக்கான என்னும் சிங்களக் கிராமத்திற்கும் வருகை தந்தனர்.


ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் - 2013




( ஆலயத்தின் தீர்த்தத் துறை )


கடந்த வருடங்களை விட இவ்வருடம் ஐந்து முறை மகாவலி கங்கையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை வெள்ளம் ஏற்படும் போதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போதும் கரையில் இருந்து அருள்பாலித்து வரும் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி  ஆயலத்திணூடாகவும் வெள்ளம் பாய்ந்து ஓடும்.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

உறவுகள் அனைவருக்கும்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்....


அன்புடன்,
www.mannampitiya.blogspot.com





செவ்வாய், 1 ஜனவரி, 2013

புதுவருட வாழ்த்துக்கள் - 2013

அனைவருக்கும் மனங்கனிந்த  புதுவருட வாழ்த்துக்கள்.



அன்புடன்,
www.manampitiya.blogspot.com