Pages

திங்கள், 18 நவம்பர், 2013

கார்த்திகை தீபம் - 2013. Karthigai Deepam 2013


2013.11.17 அன்று மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவேலாயுத சுவாமி ஆலயத்தில்
 
கார்த்தினை தீப விழா சிறப்பாக நடைபெற்றது.  இவ்விழாவானது,
 
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள்  ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை   மரம் நட்டு தென்னோலைகளால்  அதனை சுற்றி அடைத்து  சொக்கப்பானைக்கு  அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபொருமான்   சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.



(கீழே உள்ள மேலும் வாசிக்க... என்பதனை கிளிக் செய்து இன்னும் பல படங்களைப் பாருங்கள்)



தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

 

 
திம்புலாகலை பிரதேச செயலாளர் திரு. நிஷாந்த அவர்கள் வருகை தந்து கார்த்திகை தீப விழாவில் கலந்து கொண்டு அகல் விளக்குகளுக்கு எண்ணெய் விடும் காட்சி.
 
ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு. க.கனகராஜா ஐயா அவர்களும், சமூர்த்தி உத்தியோகத்தர் திரு. யு.யுகானந்தராஜா அவர்களும் திம்புலாகலை பிரதேச செயலாளர் திரு. நிஷாந்த அவர்களும் தீப வழிபாட்டில் கலந்து கொள்ளம் காட்சி.
 
 
 
வழிபாட்டில் கலந்து கொண்ட அடியார்களில்  சிலர்...
 
 
தீபத்தினை வணங்குகின்றனர்.
 
 
தீப வழிபாட்டின் இறுதியில் பிரதேச செயலாளர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. வழங்குபவர் ஆலய நித்திய குருக்கள் சிவ ஸ்ரீ விஜிதநாதக் குருக்கள்.
 
ஆலய நித்திய குருக்கள் சிவ ஸ்ரீ விஜிதநாதக் குருக்கள் அவர்கள் சொக்கப்பானைக்கு அக்கினியினை மூட்ட  ஆயத்தங்களை மேற்கொள்ளுகின்றார்.
 
 
சொக்கப்பானைக்கு அக்கினி மூட்டப்படுகின்றது.
 
சொக்கப்பானை எரிகின்றது.
 
இறுதியாக ஆலய நித்திய கருக்களால் வாழை வெட்டப்படுகின்றது.
 
 
தீப விழா இனிதே நிறைவுற்றது.
 
நன்றி,
 
வணக்கம்.
 
 

 
 

கருத்துகள் இல்லை: