Pages

சனி, 11 மே, 2013

வாழ்த்துக்கள்

 
 
எமது ஊரினைப் பிறப்பிடமாகக் கொண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2011 ) தோற்றிய மாணவர்களுள் மூவர் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றேன்.
 
இவர்களுள்,  மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர் தரத்தில் கற்று சித்தியடைந்த இரு மாணவிகளும், க.பொ.த (சா.த) வரை மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில்  கற்று தனது உயர் கல்வியை (க.பொ.த. உயர் தரத்தினை) வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கற்று சித்தியடைந்த  ஒரு மாணவனும் அடங்குவர்.
 
இவர்களை வாழ்த்தும் அதே வேளை இவர்களுக்கு ஆதாரமாக இருந்த பெற்றோருக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எமது வலைத்தளத்தின் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
 
நன்றி,
வணக்கம்.

கருத்துகள் இல்லை: