Pages

சனி, 11 மே, 2013

வாழ்த்துக்கள்

 
 
எமது ஊரினைப் பிறப்பிடமாகக் கொண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2011 ) தோற்றிய மாணவர்களுள் மூவர் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றேன்.
 
இவர்களுள்,  மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர் தரத்தில் கற்று சித்தியடைந்த இரு மாணவிகளும், க.பொ.த (சா.த) வரை மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில்  கற்று தனது உயர் கல்வியை (க.பொ.த. உயர் தரத்தினை) வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கற்று சித்தியடைந்த  ஒரு மாணவனும் அடங்குவர்.
 
இவர்களை வாழ்த்தும் அதே வேளை இவர்களுக்கு ஆதாரமாக இருந்த பெற்றோருக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எமது வலைத்தளத்தின் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
 
நன்றி,
வணக்கம்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2013




உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள புதுவருட வாழ்த்துக்கள்....


அன்புடன்,
www.mannampitiya.blogspot.com
 

புதன், 3 ஏப்ரல், 2013

வீதி நாடகம் - நாளை அல்ல இன்றே

தேசிய மொழிகள் மற்றம் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும், நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டமும்  (UN) இணைந்து கிராமங்களில் வீதி நாடகத்தின் மூலம் மக்களுக்கு சட்டத்தினை அறிமுகம் செய்யும் கருத்திட்டத்தின் கீழ் அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தந்தபோது பொலன்னறுவை மாவட்டத்தில்  திம்புலாகலை, வெலிக்கந்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்  வருகை தந்தனர்.

இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர்கள் அடங்கிய மக்கள் கலரி குழுவினரே வீதி நாடகங்களில் நடித்தனர்.



நாளை அல்ல இன்றே பதாதை


திம்புலாகலை பிரதேச செயலாளர் பிரிவில் மன்னம்பிட்டி (எமது கிராமம்), நாமல்பொக்குன, சொறுவில் ஆகிய தமிழ்க் கிராமங்களுக்கும் தழுக்கான என்னும் சிங்களக் கிராமத்திற்கும் வருகை தந்தனர்.


ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் - 2013




( ஆலயத்தின் தீர்த்தத் துறை )


கடந்த வருடங்களை விட இவ்வருடம் ஐந்து முறை மகாவலி கங்கையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை வெள்ளம் ஏற்படும் போதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போதும் கரையில் இருந்து அருள்பாலித்து வரும் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி  ஆயலத்திணூடாகவும் வெள்ளம் பாய்ந்து ஓடும்.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

உறவுகள் அனைவருக்கும்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்....


அன்புடன்,
www.mannampitiya.blogspot.com





செவ்வாய், 1 ஜனவரி, 2013

புதுவருட வாழ்த்துக்கள் - 2013

அனைவருக்கும் மனங்கனிந்த  புதுவருட வாழ்த்துக்கள்.



அன்புடன்,
www.manampitiya.blogspot.com


ஞாயிறு, 23 டிசம்பர், 2012

கண்ணீர் அஞ்சலி

நம் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் எண்ணில் அடங்காதவை. கடும் காற்று, மழை காரணமாக மாத்தளை ரத்தோட்டையில் மரமொன்று வேனில் சரிந்து வீழ்ததில் உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் மன்னம்பிட்டியைச் சேர்ந்தவர்களே. 



இவ் விபத்தில் மூவர் மரணமடைந்தனர்.பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறைவனடி சேர்தவர்களின் ஆத்மா சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்.