Pages
வெள்ளி, 12 ஏப்ரல், 2013
புதன், 3 ஏப்ரல், 2013
வீதி நாடகம் - நாளை அல்ல இன்றே
தேசிய மொழிகள் மற்றம் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும், நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டமும் (UN) இணைந்து கிராமங்களில் வீதி நாடகத்தின் மூலம் மக்களுக்கு சட்டத்தினை அறிமுகம் செய்யும் கருத்திட்டத்தின் கீழ் அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தந்தபோது பொலன்னறுவை மாவட்டத்தில் திம்புலாகலை, வெலிக்கந்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் வருகை தந்தனர்.
இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர்கள் அடங்கிய மக்கள் கலரி குழுவினரே வீதி நாடகங்களில் நடித்தனர்.
இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர்கள் அடங்கிய மக்கள் கலரி குழுவினரே வீதி நாடகங்களில் நடித்தனர்.
நாளை அல்ல இன்றே பதாதை
திம்புலாகலை பிரதேச செயலாளர் பிரிவில் மன்னம்பிட்டி (எமது கிராமம்), நாமல்பொக்குன, சொறுவில் ஆகிய தமிழ்க் கிராமங்களுக்கும் தழுக்கான என்னும் சிங்களக் கிராமத்திற்கும் வருகை தந்தனர்.
ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013
ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் - 2013
( ஆலயத்தின் தீர்த்தத் துறை )
கடந்த வருடங்களை விட இவ்வருடம் ஐந்து முறை மகாவலி கங்கையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை வெள்ளம் ஏற்படும் போதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போதும் கரையில் இருந்து அருள்பாலித்து வரும் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆயலத்திணூடாகவும் வெள்ளம் பாய்ந்து ஓடும்.
ஞாயிறு, 13 ஜனவரி, 2013
செவ்வாய், 1 ஜனவரி, 2013
ஞாயிறு, 23 டிசம்பர், 2012
கண்ணீர் அஞ்சலி
நம் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் எண்ணில் அடங்காதவை. கடும் காற்று, மழை காரணமாக மாத்தளை ரத்தோட்டையில் மரமொன்று வேனில் சரிந்து வீழ்ததில் உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் மன்னம்பிட்டியைச் சேர்ந்தவர்களே.
இவ் விபத்தில் மூவர் மரணமடைந்தனர்.பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறைவனடி சேர்தவர்களின் ஆத்மா சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்.
செவ்வாய், 18 டிசம்பர், 2012
மன்னம்பிட்டியில் வெள்ளம் (18.12.2012) Manampitiya Flood - 18.12.2012
மன்னம்பிட்டியில் வெள்ளம் பகுதி - 2
Manampitiya Flood part - 2 (18.12.2012)
நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும், அருகிலுள்ள குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் மன்னம்பிட்டி- பொலன்னறுவை ஆகிய நகர்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மன்னம்பிட்டியிலிருந்து பொலன்னறுவை செல்ல புகையிரதத்தையே பலர் நம்பியிருந்தனர், புகையிரதப் பாதையில் வெள்ளம் பாய்ந்ததால் புகையிரதமும் நிறுத்தப்பட்டது. சிலர் புகையிரதப் பாதையில் நடந்து சென்றதைக் காண முடிந்தது.
மழை தொடர்வதால் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பலர் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மன்னம்பிட்டி கொட்டலிப் பாலத்தின் மேலோல் வெள்ளம் செல்லும் காட்சி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





