Pages

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

மன்னம்பிட்டியில் வெள்ளம் (04.02.2011) Manampitiya Flood -04.02.2011

இன்ற மன்னம்பிட்டியில் நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. நேற்றுடன் ஒப்பிடுகையில் புதிய பகுதிகளையும் வெள்ள நீர் தனதாக்கிக் கொண்டது. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சிலர் புகையிரதப் பாதையால் நடந்து சென்று பொலன்னறுவையை அடைந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பலர் ஏமாற்றத்துடன் வீட்டுக்குச் சென்றனர்.

இன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.



மன்னம்பிட்டி புகையிரத நிலையம் (03.02.2011)

புதன், 2 பிப்ரவரி, 2011

மன்னம்பிட்டியில் மீண்டும் வெள்ளம் (02.02.2011) Manampitiya Flood -02.02.2011

இன்று (02.02.2011) காலை முதல் பொலன்னறுவைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையிலான வாகனப் போக்குவரத்து ( A11வீதியில்)  காலை முதல் தடைப்பட்டுள்ளது.   வெள்ளம் மாலைவரை அதிகரித்துக் கொண்டே சென்றது. 

மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் புகையிர சேவை இடம் பெறுவதால் பயணிகள் வெள்ளம் தேங்கியுள்ள 10 கிலோமீட்டர் தூரத்தினைப் பகையிரதத்தில் கடக்கின்றனர். 

மன்னம்பிட்டி வரையில் ஏனைய பிரதேசங்களில் இருந்து வரும் பேரூந்துகள் ( பஸ் வண்டிகள்) புகையிரதத்தில் வரும் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

வெள்ளம் தொடர்பான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக கீழே உள்ளன.


மன்னம்பிட்டி நகரில் தரித்து நிற்கும் பஸ்வண்டிகள்

வெள்ளி, 14 ஜனவரி, 2011

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க... வழர்க... வெல்க...



நன்றி
வணக்கம்.

திங்கள், 10 ஜனவரி, 2011

மன்னம்பிட்டியில் வெள்ளம் (10.01.2011) Manampitiya Flood 10.01.2011

இன்று (10.01.2011) திங்கட்கிழமை பொலன்னறுவைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டே இருந்தது. நீர்மட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. மழை தொடர்ந்து பொழிந்து கொண்டுள்ளது.



மன்னம்பிட்டி புகையிரத நிலையத்தின் முன்னால் பாதையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள பஸ் வண்டிகள் சில.

மன்னம்பிட்டியில் வெள்ளம் (09.01.2011) Manampitiya Flood 09.01.2011

இன்று (09.01.2011) அன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இருந்து பொலன்னறுவைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையிலான வாகனப் போக்குவரத்து (காலையிலிருந்தே) தடைப்பட்டிருந்தது.

 காலையிலிருந்து மாலைவரை வெள்ள நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. மழையும் விடாது பொழிந்து கொண்டே இருந்துது. தாழ்வான இடங்களில் நீர் தேங்கியிருந்ததைக் காண முடிந்தது. 

வெள்ளம் தொடர்பான சில படங்கள் கீழே உள்ளன.


மன்னம்பிட்டி நகரில் தரித்து நின்ற பேரூந்துகளில் சில


பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்

போக்குவரத்து தடைப்பட்டதால் புகையிரத சேவையினர் பயனிகளை மினிப் புகையிரதத்தில் ( பஸ் கோச்சில்) பொலன்னறுவைக்கும் மன்னம்பிட்டிக்குமிடையில் ஏற்றி இறக்கும் காட்சி.


பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்


பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்


பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்


பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்


பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்


மதகினூடாகப் பாயும் வெள்ளம்


மன்னம்பிட்டி நகரின் பெயர்ப்பலகை ((09.01.2011) அன்று காலை


வெள்ள நீர்ட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.