Pages

சனி, 8 செப்டம்பர், 2018

சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் அமரர். கலாநிதி. எஸ்..வை .ஸ்ரீதர் அவர்களுக்கு நடத்தப்பட்ட இறுதி அஞ்சலி நிகழ்வுகள்….

அமரர் எஸ்.வை. ஸ்ரீதர்  அவர்கள்  கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அதிதீவிர நரம்பு சிகிச்சைப் பிரிவில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி 25.06.2017 அன்று, தனது இவ்வுலகப் பயனத்தை முடித்துக் கொண்டார். 

அவரின் பூதவுடல் கொழும்பும்பில் இருந்து  அவர் வசித்து வந்த பலாங்கொடை இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  

பலாங்கொடை இல்லத்திலிருந்து  எடுத்துச் செல்லப்பட்டு சப்பிபரகமுவ பல்கலைக்கழகத்தினரின் அஞ்சலிக்காக பல்கலைக்கழகத்தின் கேட்போர்  கூடத்தில்   அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  


சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில்  இடம் பெற்ற இறுதி நிகழ்வுகள்….





பல்கலைக்கழக நுழைவாயில்  வெள்ளைக்  கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுக் காணப்படுகின்றது.



பல்கலைக்கழக நுழைவாயிலில்  பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.




பல்கலைக்கழகத்தினுள்ளே, அமரர் எஸ்.வை. ஸ்ரீதர்  அவர்களது படம் தாங்கிய    அலங்கார  நுழைவாயில் , கிறிஸ்தவ  முறைப்படி,   அமைக்கப்பட்டிருந்தது. 




சப்பிரகமுவ  பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரையாளர்களும் தமது பட்ட மேலங்கியை  அணிந்து ,  வரிசையாகவும் அமைதியாகவும்  அமரர் எஸ்..வை .ஸ்ரீதர் அவர்களின் பூதவுடலைத் தாங்கிய ஊர்திக்கு முன்னால்  அணிவகுத்து பிரதான கேட்போர்  கூடத்தை நோக்கிச் செல்கின்றனர்.



சப்பிரகமுவ  பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரையாளர்களும் தமது பட்ட மேலங்கியை  அணிந்து , வரிசையாகவும் அமைதியாகவும்  அமரர் எஸ்.வை .ஸ்ரீதர் அவர்களின் பூதவுடலைத் தாங்கிய ஊர்திக்கு முன்னால்  அணிவகுத்து பிரதான கேட்போர்  கூடத்தை நோக்கிச் செல்ல மாணவர்கள் தங்கள் ஆசானுக்கு பாதையின் இரு மருங்கிலும் வரிசையாக நின்று தமது இறுதி அஞ்சலியைச் செலுத்துகின்றனர்.



சப்பிரகமுவ  பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள்….  01


சப்பிரகமுவ  பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள்…. 02


சப்பிரகமுவ  பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள்…. 03



சப்பிரகமுவ  பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள்…. 04


சப்பிரகமுவ  பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள்….  05

சப்பிரகமுவ  பல்கலைக்கழகத்தின் கேட்போர்கூடத்தினுள்ளே  கொண்டு செல்லப்பட்டு  அஞ்சலிக்காக வைக்கப்பட்டோது  பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரும் பூவுடலைச் சுற்றி வந்து தமது   இறுதி அஞ்சலியை செலுத்துகின்றனர்.. 



சப்பிரகமுவ  பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தினுள்ளே பல்கலைக்கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி அஞ்சலியும், அனுதாபக் கூட்டமும் நடைபெறுகின்றது. பல கல்விமான்கள் கலந்து கொண்டு தமது  கருத்துக்களையும்  ஆறுதல்களையும் குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர். 



சப்பிரகமுவ  பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தினுள்ளே பல்கலைக்கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி அஞ்சலியும், அனுதாபக் கூட்டமும் நடைபெற்று முடிவடைந்ததும் குடும்பத்தினர் சார்பாக நன்றி உரை இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து பூதவுடல்  அமரர் எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின்  சொந்த ஊரான மன்னம்பிட்டியை ( பொலன்னறுவையை)   நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. 




சப்பிரகமுவ  பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தினுள்ளே பல்கலைக்கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி அஞ்சலியையும்  அனுதாபக் கூட்டத்தினையும் நடத்தி, பலவழிகளிலும் உதவிய அனைத்து பல்கலைக்கழக கல்விசார், சாரா ஊழியர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்…..





தொடர்ச்சியாக அடுத்த பதிவு  ………
மன்னம்பிட்டியில்  இடம் பெற்ற இறுதி நிகழ்வுகள்……




கருத்துகள் இல்லை: