Pages

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

தைப்பொங்கல் விழா - 2014 Thaippongal 2014

மன்னம்பிட்டி  ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் திம்புலாகல பிரதேச  
செயலாளர்,  திரு.எம்.யு. நிசாந்த அவர்களின் ஏற்பாட்டின் கீழ் தேசிய  மொழிகள்  மற்றம் ஒருமைப்பாட்டு அமைச்சின வழிகாட்டுதலின் கீழ் கடந்த 
21.01.2014 அன்று தைப்பொங்கல் விழா இனிதே நடைபெற்றது.
 
 
 
 
விழாவினை ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.கனகராஜா அவர்களது மேலான ஆலோசனைகளின் படியும் வழிநடத்தலின் படியும்,  ஆலய நித்திய குருக்கள் பிரம்மஸ்ரீ கு.கு. விஜிதநாதக் குருக்கள் நடத்திவைத்தார்.

(கீழே உள்ள மேலும் வாசிக்க... என்பதனை கிளிக் செய்து இன்னும் பல படங்களைப் பாருங்கள்)
 
 

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

வாழ்த்துக்கள்.... Al 2013 ... Congratulations ....

எமது மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்று, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2013 ) தோற்றிய ஆறு மாணவர்களில் நான்கு (4/6) மாணவர்கள்   பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றேன்.

 
இவர்களை வாழ்த்தும் அதே வேளை இவர்களுக்கு ஆதாரமாக இருந்த பெற்றோருக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எமது வலைத்தளத்தின் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
 
நன்றி,
வணக்கம்.