Pages

வெள்ளி, 24 டிசம்பர், 2010

மன்னம்பிட்டியில் வெள்ளம் இல்லை (24.12.2010) Manampitiya

24.12.2010 ஆம் திகதியாகிய இன்று மன்னம்பிட்டியில் வெள்ளத்தால் வாகனப் போக்குவரத்திற்குப் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. பாதையின் இரு மருங்கிலும் நீர் நிறைந்திருந்தது.





கல்லலை என்னுமிடத்தில் அரை அடிக்கும் குறைவான நீர் பாதையினை மூடிச் சென்று கொண்டிருந்தது.  பகல் 11.30 க்கு கல்லலைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையில் சில இடங்களில் பாதையில் வெள்ளநீர்  அரை அடிக்கும் குறைவாகப் பரவிச் சென்றதைக் காண முடிந்தது.





மாலைவரை வாகனப் போக்குவரத்திற்கு எந்தவொரு தடையும் ஏற்படவில்லை.

நன்றி,
வணக்கம்.

வெள்ளி, 19 நவம்பர், 2010

சூரன்போர் நிறைவு

சூரன்போர்ப் பெருவிழா கடந்த 11.11.2010 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாக் காட்சிகள் சில கிழே உள்ளன.

 தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தின் சூரன் போருக்குத் தயாராகின்றார்.

 சூரனை அழிப்பதற்கு முருகப் பெருமான் ஆலயத்தின் வசந்த மண்டபத்திலிருந்து வெளியேறுகின்றார்.

 ஆலயத்தின் உள்வீதியில் முருகப் பெருமான் வலம்வருகின்றார்.

 ஆலயத்தின் உள்வீதியில் முருகப் பெருமான் வலம்வருகின்றார்.

 ஆலயத்தின் உள்வீதியில் முருகப் பெருமான் வலம்வருகின்றார்.

 ஆலயத்தின் வெளி வீதியில் முருகப் பெருமான் தயாராகின்றார்.

 முருகப் பெருமானை எதிர்க்க சூரன் தயாராகின்றார்.

ஆலய முன்றலில் போர் தொடங்குகின்றது


ஆலயத்தின் வெளி வீதியில் முருகப் பெருமானுக்கும் சூரனுக்குமிடையே போர் நடைபெறுகின்றது.

ஆலயத்தின் வெளி வீதியில் முருகப் பெருமானுக்கும் சூரனுக்குமிடையே போர் நடைபெறுகின்றது.
 முருகப் பெருமான் எதிர்த்து முன்னேறுகின்றார்.

சூரன் முருகப் பெருமானைத் தாக்க முன்னேறுகின்றார்


வெளி வீதியில் போர் நடைபெறுகின்றது.


வெளி வீதியில் போர் தொடர்கின்றது.
வெளி வீதியில் போர் தொடர்கின்றது.

 வெளி வீதியில் போர் தொடர்கின்றது.
 வெளி வீதியில் போர் தொடர்கின்றது.

மாவிலை, பட்டைகளைப் பெற்று தமது வீட்டுக்கு எடுத்துச் செல்ல அடியவர்கள் முயற்சி செய்கின்றனர்.

சூரனை அழித்த வெற்றிக்களிப்பிர் முருகப் பெருமான் வசந்த மண்டபத்தில் இருக்கின்றரர்.


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் உங்களைக் காப்பாராக....

நன்றி
வணக்கம்.

கந்தஷஷ்டி விரதம் நிறைவு

தம்பன்கடவை ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம் பெற்று வந்த கந்தஷஷ்டி விரதம் கடந்த 11.11.2010 அன்று சூரன் போருடன் நிறைவுற்றது. இவ் விரதம் தொடர்பான சில காட்சிகள்.







நன்றி
வணக்கம்

திங்கள், 8 நவம்பர், 2010

கந்தஷஷ்டி விரதம்

மன்னம்பிட்டி தம்பன் கடவை ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்தஷஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ளது. பல அடியார்கள் இவ் விரத்தை அனுஸ்டிக்கின்றனர். இவ்விரதம் சூரன்போருடன் எதிர்வரும் 11.11.2010 அன்று முடிவடையும்.

கந்தஷஷ்டி விதரத்திற்கானதும் சூரன்போருக்குமானதுமான  பதாதை இதுவாகும்.

கேதாரகௌரி விரதம் நிறைவு

மன்னம்பிட்டி, அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற கேதார கௌரி விரதம் கடந்த ஆறாம் திகதியுடன் (06.11.2010 ) முடிவடைந்த்து.  அது தொடர்பான சில படங்கள் இவையாகும்.



நன்றி
வணக்கம்

வெள்ளி, 5 நவம்பர், 2010

தீபாவளி வாழ்த்துக்கள்

உங்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நன்றி.
வணக்கம்

சனி, 25 செப்டம்பர், 2010

கிராமத்தின் முக்கிய இடங்களும் சங்கங்களும்

இக் கிராமமானது பொலன்னறுவை மாவட்டதில் தமிழர் வாழ்ந்து வருவதற்கான பிரதான சான்றாகத் திகழ்ந்து வருகின்றது. இங்கு தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதற்கான சான்றுகள்    நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆதாரங்களைக் கொண்டுள்ளது.  பொலன்னறுவை மாவட்டத்தில் தமிழ்மக்கள் கிழக்கு மாகாணத்தை அண்டியே வாழ்கின்றனர்.

 
மன்னம்பிட்டியில் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய மூவினத்தவரும் இணைந்து வாழ்கின்றனர். ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது மகாவலி அபிவித்தித் திட்டம் என்ற போர்வையில் பல குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், தமிழ் மக்களின் விகிதாசாரம் குறைந்து கொண்டே போகின்றது.  

 
வணக்கத் தலங்கள்:

 
இந்துக்களின் ஆலயங்கள்

 
  • கிராமத்தில் அமைந்துள்ள ஆலயங்கள்:
  • தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்
  • ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
  • கண்ணகி அம்மன் ஆலயம்
  • மாரியம்மன் ஆலயம்
  • காளி கோயில்

 
பௌத்தர்களின் வணக்கத் தலம்
  •  மன்னம்பிட்டி விகாரை

 
முஸ்லிம்களின்  வணக்கத் தலம்
  • மன்னம்பிட்டி பள்ளிவாசல்
பாடசாலைகள்
  • மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயம் (http://www.mtmv.sch.lk/)
  • மன்னம்பிட்டி சிங்கள மகா வித்தியாலயம்

அரசாங்க அலுவலகங்கள்

 
  • கிராமிய வைத்தியசாலை
  • ஆயுர்வேத வைத்தியசாலை
  • புகையிதர நிலையம்
  • பிரதேச செயலாளர் அலுவலகம்
  • வலயக் கல்விப் பணிமணை
  • ஆசிரியர் வள நிலையம்

 
வங்கிகள்

 
  • செலான் வங்கி
  • பிரதேச அபிவிருத்தி வங்கி
  • கிராமிய அபிவிருத்தி வங்கி

 
தமிழ் மக்களினால் உருவாக்கப்பட்டுள்ள சங்கங்கள்

 
  • நலன்புரிச் சங்கம்
  • இந்து இளைஞர் பேரவை
  • இளைஞர் கழகம்
  • சக்தி விளையாட்டுக் கழகம்
  • மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள்

 
வருகைக்கு நன்றி
வணக்கம்...

 
விபரங்கள் தொடரும்.....

 

வியாழன், 23 செப்டம்பர், 2010

அனைவருக்கும் வணக்கம்...

வணக்கம்,

இந்த வலைத்தளமானது எனது கிராமம் பற்றி உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரு நோக்குடன் ஆரம்பிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்காவில் (இலங்கையில்) வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மாவட்டத்தில் பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் (A11 வீதியில்)  அமைந்துள்ளது....



பதிவுகள் தொடரும்..

உங்கள் வருகைக்கு நன்றி
வணக்கம்.