அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டி - 2019
பாவோதல் பகுதிகளுக்கான பாடல்களும் பொருள்களும்
01. 2019ஆம்
ஆண்டிற்குரிய அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகள் யாவூம் இவ்விணைப்பில் குறிப்பிடப்படும்
விடயங்களுடன், சுற்றுநிருப இல 35 / 2018ல் குறிப்பிட்டவாறே நடைபெறல் வேண்டும்.
35 / 2018 சுற்று
நிருபம் 2019.01.01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.
02. 2019 ஆம்
ஆண்டிற்குரிய போட்டிகள் நடாத்தப்பட வேண்டிய திகதிகள் பின்வருமாறு:
அ.
பாடசாலை மட்டப் போட்டிகள் 2019.03.10 ஆம் திகதிக்கு முன்பு
ஆ.
வலய மட்டப் போட்டிகள் 2019.03.30 ஆம் திகதிக்கு முன்பு
இ.
மாகாண மட்டப் போட்டிகள் 2019.05.15 ஆம் திகதிக்கு முன்பு
03. தேசிய
மட்டப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் 2019.05.30 ஆம் திகதிக்கு முன்பு அனுப்பப்படல் வேண்டும்.
யூலை
மாதம் 13, 14 மற்றும் 20 , 21ம் திகதிகளில் அகில
இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகளுக்கான
பாவோதல் பகுதிகள் – 2019
போட்டி இலக்கம் - 25
நிகழ்ச்சி – பாவோதல்
வகுப்பு -
04, 05
விடயம் - பாரதியார்
கவிதைகள் ( 2 ) பக்திப் பாடல்கள்
சித்த சாகரஞ்
செய்தனை, ஆங்கதிற்
செய்த கர்மப் பயனெனப் பல்கினை,
தத்து கின்ற திரையுஞ் சுழிகளும்
தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும் சுட்டவெந் நீருமென்று
ஒத்த நீர்கடல் போலப் பலவகை
உள்ள மென்னுங் கடலில் அமைத்தனை.
செய்த கர்மப் பயனெனப் பல்கினை,
தத்து கின்ற திரையுஞ் சுழிகளும்
தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும் சுட்டவெந் நீருமென்று
ஒத்த நீர்கடல் போலப் பலவகை
உள்ள மென்னுங் கடலில் அமைத்தனை.
நாலடியார் (6 ) துறவுப் பகுதியில் 53ம் பாடல்
இல்லம், இளமை, எழில், வனப்பு, மீக்கூற்றம்,
செல்வம், வலி, என்று இவை எல்லாம், மெல்ல,
நிலையாமை கண்டு, நெடியார், துறப்பர்-
தலையாயார்-தாம் உய்யக் கொண்டு.
செல்வம், வலி, என்று இவை எல்லாம், மெல்ல,
நிலையாமை கண்டு, நெடியார், துறப்பர்-
தலையாயார்-தாம் உய்யக் கொண்டு.
பொ-ள் - இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம் செல்வம் வலி என்று இவையெல்லாம் - இல்வாழ்வு, இளமை, எழுச்சி, அழகு, உயர்சொல், பொருள், வலிமை என்று இப்பேறுகளெல்லாம், மெல்ல நிலையாமை கண்டு - மெல்ல மெல்ல நிலையாமற் போதலை அறிந்து, தலையாயார் - பெரியோர்கள், தாம் உய்யக்கொண்டு - தாம் உய்யுங் கருத்துக்கொண்டு, நெடியார் துறப்பர் - காலம் நீட்டியாதவராய் உடனே இருவகைப் பற்றுந் துறப்பர்.
(க-து.) நிலையாமை உணர்ந்து துறவுள்ளங் கொள்வோரே துன்பங்களினின்றும் பிழைப்பவர்.
போட்டி இலக்கம் - 26
நிகழ்ச்சி – பாவோதல்
வகுப்பு -
06, 07
விடயம் - பாரதியார்
கவிதைகள் ஞானப் பாடல் … அழகு தெய்வம்
பகுதியில் ….
காலத்தின்விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்.
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண் என்றாள்.
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்.
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண் என்றாள்.
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.
விடயம் - ஏலாதி
( கற்றாரைக் கற்று…………….
………………….. பயின்று)
கற்றாரைக் கற்றது உணரார் என மதியார்,
உற்றாரை அன்னணம் ஓராமல், அற்றார்கட்கு
உண்டி, உறையுள், உடுக்கை இவை ஈந்தார்-
பண்டிதராய் வாழ்வார், பயின்று.
உற்றாரை அன்னணம் ஓராமல், அற்றார்கட்கு
உண்டி, உறையுள், உடுக்கை இவை ஈந்தார்-
பண்டிதராய் வாழ்வார், பயின்று.
(இ-ள்.) கற்றாரை - கற்று வல்ல சான்றோரை, கற்றது - தாங் கற்ற கல்விப் பொருளை, உணரார் என - அறியமாட்டாரென்று, மதியார் - நினையாமலும், உற்றாரை - உறவினர் நண்பரையும், அன்னணமும் - அவ்வகையாக, ஓராமல் - அன்பில் உயர்வு தாழ்வுகள் எண்ணாமலும், அற்றார்க்கு - பொருளற்ற வறிஞர்க்கும் பற்றற்ற துறவிகட்கும், உண்டி உறை உள் உடுக்கை - உணவும், மருந்தும், இடமும், உடையும், இவை ஈந்தார் - என்றிவற்றைக் கொடுக்கின்றவர்கள், பண்டிதராய் - அறிஞர்களாய், பயின்று - யாவரானும் மதிக்கப்பட்டு, வாழ்வார் - இனிது வாழ்வார்கள்.
போட்டி இலக்கம் - 27
நிகழ்ச்சி – பாவோதல்
வகுப்பு -
08, 09
விடயம் - பாரதியார் கவிதைகள்
( பல்சுவைப் பாடல்கள் –
நிலவும் வான் மீனும் காற்றும் பகுதியில் )
மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும்
வானவன் கொண்டுவந்தான்;
பண்ணி லிசைத்தவ் வொலிக ளனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம். நண்ணி வருமணி யோசையும், பின்னங்கு நாய்கள் குலைப்பதுவும், எண்ணுமுன்னேஅன்னக் காவடிப் பிச்சை’யென் றேங்கிடு வான்குரலும், |
வீதிக் கதவை அடைப்பதுங் கீழ்த்திசை
விம்மிடும் சங்கொலியும், வாதுகள் பேசிடு மாந்தர் குரலும மதலை யழுங்குரலும் -- ஏதெது கொண்டு வருகுது காற்றிவை எண்ணி லகப்படுமோ? சீதக் கதிர்மதி மேற்சென்று பாய்ந்தங்கு தேனுண்ணுவாய் மனேம.
விடயம் - நளவெண்பா
‘அறம்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும்
மறம்கிடந்த திண்டோள் வலியும் – திறங்கிடந்த செங்கண்மால் அல்லனேல் தேர்வேந்தர் ஒப்பரோ அங்கண்மா ஞாலத் தவற்கு?’ |
பொருள் -
தருமம் குடி கொண்ட மனமும், இரக்கவுணர்வே வழிகின்ற கண்களும், வீரம் மிக்க திண்மையான தோள்களின் வலிமையும் உள்ளவனாயிருத்தலால், அழகிய இடத்தையுடைய இப்பெரு மண்ணுலகத்தில் அந்நளனுக்குச் சிவந்த கண்ணினையுடைய திருமாலே நிகராக மாட்டான் என்றால், மற்றத் தேர் ஊர்ந்து செல்லும் அரசர் அவனை ஒப்பர் எனக் கூறலாமோ? (கூறலாகாது)
விடயம் - பழமொழி நானூறு
( பேருலையுள் ……..
………………. காரணம் ஆ மாறு )
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர் அவிழினாலே உணர்ந்தாங்கு, யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம்; யாதற்கும்
கண்டது காரணம் ஆமாறு.
ஓர் அவிழினாலே உணர்ந்தாங்கு, யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம்; யாதற்கும்
கண்டது காரணம் ஆமாறு.
பொருள் - யார் கண்ணும் கண்டது காரணம் ஆமாறு - யாவரிடத்தும் அறியப்பட்ட குணமே அறியப்படாத பிறவற்றையும் அறிதற்குரிய வழியாம் (ஆதலால்), பேர் உலையுள் பெய்த அரிசியை - கொதிக்கின்ற பெரிய உலையுள் இட்ட அரிசியை, வெந்தமை - வெந்த விதத்தை, ஓர் மூழையாலே உணர்ந்தாங்கு - ஓர் அகப்பைச் சோற்றாலே அறிந்ததைப்போல, யார் கண்ணும் கண்டதனால் காண்டலே வேண்டும் - யாரிடத்தும் அறியப்பட்ட செயல் ஒன்றுகொண்டே குணம்,ஒழுக்கம் முதலியவற்றை அறிதல் வேண்டும்.
(க-து.) ஒருவருடைய செயல் கொண்டே அவரது குணம்,ஒழுக்கம் முதலியவற்றை அறியவேண்டும். 'கண்டது காரணம் ஆம்' என்பது பழமொழி.
போட்டி இலக்கம் - 28
நிகழ்ச்சி – பாவோதல்
வகுப்பு -
10, 11
விடயம் - பாரதியார்
கவிதைகள் ( குயிற்பாட்டு- இருளும் ஒளியும்
பகுதியில்)
(
காலைக் கதிரழகின் ……….
…………….. நான் தொழுதேன்)
காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்.
தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி்
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினி தென்றுரைப்பர்; கண்ணுக்குக் கண்ணாகி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினி தென்றுரைப்பர்; கண்ணுக்குக் கண்ணாகி
விண்ணை அளக்குமொளி மேம்படுமோர் இன்பமன்றோ
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல,
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப்புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி,
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல,
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப்புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி,
மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சிதந்து
விண்ணை வெளியாக்கி, விந்தைசெயுஞ் சோதியினைக்
காலைப்பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்
விண்ணை வெளியாக்கி, விந்தைசெயுஞ் சோதியினைக்
காலைப்பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்
விடயம் - கம்பராமாயணம் (கோசலை தன் மயிவயிற்றில்…..
(சித்தரும் இயக்கரும்
……………….
…………………
தருமம் ஓங்கவே)
சித்தரும் இயக்கரும் தரெிவைமார்களும்
வித்தக முனிவரும் விண் உேளார்களும்
நித்தரும் முறை முறை நெருங்கி ஆர்ப்பு உறத்
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.
பொருள் - சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும் - சித்தர்களும். இயக்கர்களும். அவரவர்களது தேவியர்களும்; வித்தக முனிவரும் -அறிவில் சிறந்து விளங்கும் முனிவர்களும்; விண்ணுளோர்களும் -விண்ணுலகத்தில் உள்ளவர்களும்; நித்தரும் முறைமுறை நெருங்க ஆர்ப்புற - நித்திய சூரிகளும் முறைப்படி கூடி ஆரவாரம் செய்யவும்; நீள் தருமம் தத்துறல் ஒழிந்து ஓங்க - நெடிய தருமதேவதை
இடையீடின்றிப் பெருகி வளரவும்.
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து.
அரு மறைக்கு உணர்வு அரும்
அவனை. அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில்
காட்டும் சோதியை.
திரு உறப் பயந்தனள் – திறம்
கொள் கோசலை.
பொருள் - ஒருபகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து- பிரளயத்தின்போது
எல்லா
உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கி; அருமறைக்கு
உணர்வு அரும்அவனை - அரிய மறைகளாலும் தெரிந்து கொள்ள
இயலாத
பரம்பொருளாகிய அப்பரமனை; அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில்காட்டும் சோதியை - அஞ்சமனம் போன்று கரிய
மேகக் கொழுந்தின் அழகைக் காட்டிநிற்கும் ஒளிவடிவாய்த் திகழ்பவனை; திறம்கொள் கோசலை திருஉறப் பயந்தனள் - திறமையுடைய கோசலை. உலகம் மங்கலம் பொருத்த. ஈந்தாள்.
விடயம் - பழமொழிநானூறு
தெற்ற அறிவு
……..
………………. தேம்பல் நன்று)
தெற்ற அறிவுடையார்க்கு அல்லால், திறன் இல்லா
முற்றலை நாடிக் கருமம் செய வையார்;
கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும்,
அற்றதன்பால் தேம்பல் நன்று.
முற்றலை நாடிக் கருமம் செய வையார்;
கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும்,
அற்றதன்பால் தேம்பல் நன்று.
(சொ-ள்.) தெற்ற அறிவுடையார்க்கு அல்லால் - தெளிவாக அறிந்த அறிவுடையாரைத் தேடிவைப்பதல்லாமல், திறன் இலா முற்றலை - திறமையில்லாத முதிர்ந்தவர்களை, நாடி கருமம் செயவையார் - ஆராய்ந்து செயலைச் செய்ய வைக்க மாட்டார்கள். (காரியம் முடியவேண்டுமென்ற கருத்துடையார்), ஒன்று கற்று அறிந்து கசடு அற்ற காலையும் - ஒரு பொருளைக் கற்றறிந்து கல்வியின்கண் குற்றமில்லாது ஒருவர் விளங்கிய இடத்தும், மற்று அதன்பால் - குணமில்லையாயின் அவரிடத்துக் கொண்ட நட்பு, தேம்பல் நன்று -மெலிதலே நல்லது.
(க-து.)காரியம் முடியவேண்டுமென்று நினைப்பவர்கள் சிறந்தஅறிவு பெற்றவர்களையே அதனைச் செய்ய நிறுத்துதல்வேண்டும்.
' கற்றொன் றறிந்து கசடற்றகாலையும் மற்றதன்பாற் றேம்பல் நன்று' என்பதுபழமொழி
விடயம் - புறநானூறு
‘ எருமை அன்ன
…………
…………………. அருவ கரைத்தே
‘
எருமை அன்ன கருங் கல் இடை தோறு,
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை! நீயோ, பெரும!
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே.
பொருள் - எருமைபோலும்வடிவையுடைய கரிய கற்பொருந்திய இடந்தோறும் பெற்றம்போலப்பரக்கும் யானையையுடையவாய் வலியையுடைய காட்டிற்
குள்ளாகியநாட்டினையுடையாய்! பெரும! நீ இங்ஙனம் பகைவரான்அணுகப்படாத இயல்பாகிய பெருஞ் செல்வத்தையுடையனாதலால், நினக்கு ஒரு காரியஞ் சொல்வேன்; அதனைக் கேட்பாயாக; அருளையும் அன்பையும் நீக்கிப் பாவஞ்
செய்தாரைநீங்காத நரகத்தைத் தமக்கிடமாகக் கொள்பவரோடு
பொருந்தாது நீ காக்கப்படும் தேயத்தைக் குழவியை வளர்ப்பாரைப்
போலப் பாதுகாப்பாயாக; அளிக்கத்தக்க தொன்று அக்காவல்; அது பெறுதற்கரிது, எ - று.
குறிப்பு - அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகளுக்கான இணைப்பு – 2019 இல்
வழங்கப்பட்டுள்ள பாடல் இலக்கங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பாடல் அடிகளுக்கும் முரண்பாடுகள் காணப்பட்ட பாடல்களுக்கு மாத்திரம்
பாடல் அடிகளைக் கொண்டு ( பொருத்தம் எனக் கருதும்)
பாடல்கள் தரப்பட்டுள்ளன. ஆசிரியப் பெருமக்கள்
ஆராய்ந்து பயனப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி - தமிழ்
இணையக் கல்விக்கழகம் மற்றும் தமிழ் கிறுக்கன்
;
மேலதிக
விளக்கங்களை கீழே தரப்பட்டுள்ள இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளுங்கள்
http://www.tamilvu.org/node/154572?linkid=71768
jkpo; ,izaf; fy;tpf;fofk;
https://tamilkirukkan.wordpress.com/நளவெண்பா/நளவெண்பா-சுயம்வர-காண்டம்/
2 கருத்துகள்:
நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக