Pages

சனி, 15 செப்டம்பர், 2012

மன்னம்பிட்டி முதல் உகந்தை வரை

பாடசாலையின் இரண்டாம் தவணை விடுமுறையின் போது மன்னம்பிட்டியிலிருந்து உகந்த வரை (உகந்தை முருகன் ஆலயத்திற்குச்) செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

மன்னம்பிட்டியிருந்து பேரூந்தில் கல்முனை வரைச் சென்று அங்கிருந்து வாடகை வண்டியில் சென்றுவந்தேன்.

மன்னம்பிட்டியிலிருந்து அக்கரைப்பற்று பேருந்தில் காலை 5.45க்கு ஏறி 9.30க்கு கல்முனையை அடைந்தேன்.

(எமது பேரூந்துகளில்பயணம் செய்யத் தனித் திறமை வேண்டும். இது பற்றி இன்னமொரு பதிவில் எழுதவுள்ளேன்)

கல்முனையிலிருந்து உகந்தை ( இதனை சிங்கள மக்கள் ஒக்கந்தை என்று கூறுவர்) முருகன் ஆயலயத்திற்னான பயணம் தொடங்கியது. பயணத்தின் போது கிழக்குக் கடற்கரையின் அழகினை பார்த்துக் கொண்டே செல்லக் கூடியதாக இருந்தது.

ஒவ்வொரு ஊரிலும் மக்கள் தங்களுக்குரிய தனித்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். மன்னம்பிட்டி முதல் பானமை வரை சாலை முற்றிலும் சீரமைக்கப்பட்டுக் காணப்பட்டது. ( ஆசியாவின் ஆச்சர்யம் ???) பானமை சென்றதும் எம்மை வரவேற்றது பானமைப் பிள்ளையார் ஆலயம்.


பானமை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வெளித் தோற்றம்.