Pages

வெள்ளி, 25 ஜூன், 2021

அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம்

அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் நான்காம்  ஆண்டு நினைவுதினம் இன்று ( 25.06.2021)  அனுஸ்டிக்கப்படுகின்றது.



இன்று நினைவு தினத் திருப்பலியை அருட்திரு. Rev. Christy Paul Jabamalai அடிகளார்   St. Paul  the Hermit Church - Digana   ஆலயத்தில் நிகழ்த்தி வைத்தார்.

நாட்டு நிலைமை காரணமான திருப்பலிக்குரிய படங்களை இணைக்க முடியவில்லை.

அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் ஆத்மா சாந்தியப் பிராத்திப்போம்.

வியாழன், 24 ஜூன், 2021

அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின்மூன்றாம் ஆண்டு நினைவுதினம்

அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் கடந்த 25.06.2020 அன்று அனுஸ்டிக்கப்பட்டது.



நினைவு தினத் திருப்பலியை அருட்திரு. A.தேவதாஸன் அடிகளார்  புனாணை அந்தோனியார் ஆலயத்தில் நிகழ்த்தி வைத்தார்.

நாட்டு நிலைமை காரணமான திருப்பலிக்குரிய படங்களை இணைக்க முடியவில்லை.


அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் ஆத்மா சாந்தியப் பிராத்திப்போம்.



வருகைதந்த அனைவருக்கும் குடும்பத்தினர் சார்பாக நன்றிகள்.

திங்கள், 17 பிப்ரவரி, 2020

அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிக்கான பாடல்களின் பொருள்கள் 2020



அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிக்கான 
பாவோதல் மற்றும் இலக்கிய விமர்சனம் ஆகியவற்றுக்கான  பாடல்களின் பொருள்கள்  2020

இவ் வருடத்திற்குரிய அகில இலங்கை தமிழ் மொழித் தினத்திற்குரிய – 2020 பாவோதல் மற்றும் இலக்கிய  விமர்சனம் ஆகிய  போட்டிகளுக்கான பாடல்களும் பொருள்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியப் பொருந்தகைகள் நன்கு வாசித்து பொருத்தமானவற்றைப் பொருத்தமான வகுப்புக்களுக்கு வழங்கி, மாணவர்கள் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற வழிகாட்டுங்கள்…….

 

போட்டி இல 25
பாவோதல்
முதராம் பிரிவு தரங்கள் 4,5

நாலடியார் பாடல்
  கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
     
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட
     
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
     
நயப்பாகும் நட்பாரும் இல்.

    
பொருள்  கொம்பிலிருக்கிற பூவைப் போலே, (முன்னே) முகமலர்ந்து, பின்பு குவியாமல், விரும்பினதே விரும்பினதா யிருப்பது,  சிநேக பரிபாலனஞ் செய்வதாம்; தோண்டப்பட்ட, குளத்திலிருக்கும் பூவைப் போலே, முதலில் முகமலர்ச்சியைக் காட்டிப் பின்பு முகம் சுருங்கிப் போகின்றவர்களை, விரும்புகின்றவர்களும் சிநேகிக்கின்றவர்களும் இல்லை, -று.


     (
-ள்.) கோட்டு பூ போல - கொம்பிலிருக்கிற பூவைப் போலே, மலர்ந்து - (முன்னே) முகமலர்ந்து, பின் கூம்பாது - பின்பு குவியாமல், வேட்டதே வேட்டது - விரும்பினதே விரும்பினதா யிருப்பது, நட்பு ஆட்சி ஆம் - சிநேக பரிபாலனஞ் செய்வதாம்; தோட்ட - தோண்டப்பட்ட, கயம் பூபோல் - குளத்திலிருக்கும் பூவைப் போலே, முன் மலர்ந்து பின் கூம்பு வாரை - முதலில் முகமலர்ச்சியைக் காட்டிப் பின்பு முகம் சுருங்கிப் போகின்றவர்களை, நயப்பாரும் நட்பாரும் இல் - விரும்புகின்றவர்களும் சிநேகிக்கின்றவர்களும் இல்லை, -று.

ஒருவரைக் கண்டவுடனே முகமலர்ச்சியோடு விரும்பியது மாறாமலிருந்தால் அதுதான் சிநேக குணம், அப்படியின்றி முன் சந்தோஷங்காட்டிப் பின் வெறுப்படைவது சிநேக குணமல்ல என்பது கருத்து.

நன்றி  சென்னை நூலகம் - https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/naaladiyar5.html

தமிழ் மொழித்தினப் பாடல்களின் பொருள்கள்  2020
போட்டி இல 26
பாவோதல்
முதராம் பிரிவு தரங்கள் 6,7

ஏலாதி

பிணி, பிறப்பு, மூப்பொடு, சாக்காடு, துன்பம்,
தணிவு இல் நிரப்பு, இவை தாழா அணியின்,
அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்று ஆம்,
நிரம்புமேல், வீட்டு நெறி.


பொருள்:   நோயும், பிறத்தலும், கிழத்தனமும், இறத்தலும், முயற்சித் துன்பமும், போதுமென்னும் அமைதியில்லாத, வறுமையும், ஆகிய இவைகள், தாழா உடனே அடையும்; ஆதலால், ஆட்ட மேடையின்கண், மாறி மாறிப் புனையுங் கோலத்தினையுடைய, ஆடுகின்றவரைப்போல, மாறி மாறிப் பிறந்திறவாமல்,  துறவொழுக்கம், ஒருவன் நிரம்புவானாயின், அவனுக்கு இன்பம் உண்டாகும்.

-ள்.) பிணி - நோயும், பிறப்பும் - பிறத்தலும், மூப்பொடு - கிழத்தனமும், சாக்காடு - இறத்தலும், துன்பம் - முயற்சித் துன்பமும், தணிவுஇல் - போதுமென்னும் அமைதியில்லாத, நிரப்பு - வறுமையும், இவை - ஆகிய இவைகள், தாழா உடனே அடையும்; ஆதலால், அரங்கின்மேல் - ஆட்ட மேடையின்கண், அணியின் - மாறிமாறிப் புனையுங் கோலத்தினையுடைய, ஆடுநர்போல் - ஆடுகின்றவரைப்போல, ஆகாமல் - மாறி மாறிப் பிறந்திறவாமல், வீட்டு நெறி - துறவொழுக்கம், நிரம்பு மேல் - ஒருவன் நிரம்புவானாயின், நன்றுஆம் - அவனுக்கு இன்பம் உண்டாகும்.
 (-து.) ஒவ்வொரு பிறப்பிலும் பிணி முதலான துன்பங்களுண்மையின், வீடுபேற்றிற்குரிய துறவொழுக்கத்தை மேற்கோடலே நன்மையாம்.

நன்றி  தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் மொழித்தினப் பாடல்களின் பொருள்கள்  2020
போட்டி இல 27
பாவோதல்
முதராம் பிரிவு 8,9

நளவெண்பா

வாய்மையம் சேங்கோல் வளனும் மனத்தின்கண்
தூய்மையும் மற்றவன் தோள்வலியும் - பூமான்
நெடுங்கற்பும் மற்றவர்க்கு நின்றுரைத்துப் போனான்
அருங்கொற்ற வச்சிரத்தான் ஆங்கு.

பொருள்:    எதிரிகளைக் கொல்லுகின்ற வச்சிராயுதப் படையையுடைய இந்திரன் அவ்விடத்தே சிறிது தாழ்த்துநின்று, அந் நளமன்னனுடைய உண்மை நெறியையும், நெறிமுறை வழுவாத ஆட்சியின் மாண்பும், நடுநின்ற மனத்தின் நேர்மையும், இன்னும் தோளாற்றலும், செந்தாமரைச் செல்வியாகிய திருமகளையொத்த தமயந்தியின் நீங்காத கற்பு முறையும், அக் கலிக்கு விளக்கிச் சொல்லிச் சென்றான்.

 ( - ள்.) அடும் கொற்ற வச்சிரத்தான் ஆங்கு நின்று - எதிரிகளைக் கொல்லுகின்ற வச்சிராயுதப் படையையுடைய இந்திரன் அவ்விடத்தே சிறிது தாழ்த்துநின்று, அவன் வாய்மையும் - அந் நளமன்னனுடைய உண்மை நெறியையும், செங்கோல் வளனும் - நெறிமுறை வழுவாத ஆட்சியின் மாண்பும், மனத்தின் கண் தூய்மையும் - நடுநின்ற மனத்தின் நேர்மையும், மற்று தோள்வலியும் - இன்னும் தோளாற்றலும், பூமான் நெடும் கற்பும் - செந்தாமரைச் செல்வியாகிய திருமகளையொத்த தமயந்தியின் நீங்காத கற்பு முறையும், அவர்க்கு உரைத்துப் போனான் - அக் கலிக்கு விளக்கிச் சொல்லிச் சென்றான்.
( - து.) இந்திரன் சிறிதுநேரம் ஆங்கே தாழ்த்து நின்று நளனுடைய உண்மை நெறி முதலியவற்றையும் தமயந்தியின் கற்புச் சிறப்பையும் கலிக்கு எடுத்துக்கூறிச் சென்றான் என்பதாம்.

நன்றி  தமிழ் இணையக் கல்விக்கழகம்


பழமொழி நானூறு

தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்
இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்
யாவரே யாயினும் நன்கொழுகார் கைக்குமே
தேவரே தின்னினும் வேம்பு.

(சொ-ள்.)  தெளிவாக நண்பு பூண்ட ஒருவரை, ஒருவர் பொல்லாங்குரைக்கும் உரையைக் கேட்டால், நம்மையும் இப்பெற்றியே உரைப்பார் என்று கருதி,  அவரை நம்பாதொழிக, உண்பவர்கள் தேவர்களேயானாலும் வேம்பு கசக்குந் தன்மையது. (அதுபோல), நட்புப் பூண்பவர்கள் மிகவும் சிறந்தவர்களாயினும் அவர்களோடு நன்றாக ஒழுகுதல் இலர்.
(-து.) தீயவரைநட்பாகக்கொண்டு ஒழுகுதல் கூடாது.

நன்றி தமிழ் இணையப் பல்கலைக்கழகம் –


தமிழ் மொழித்தினப் பாடல்களின் பொருள்கள்  2020
போட்டி இல 28
பாவோதல்
முதராம் பிரிவு 10,11



கம்பராமாயணம் – ஆரணிய காண்டம்  - ( பாடல் 01)

உற்றது உணராது, உயிர்
    
உலைய வெய்துயிர்ப்பான்
கொற்றவரைக் கண்டான்; தன்
    
உள்ளம் குளிர்ப்புற்றான்;
இற்ற இரு சிறகும், இன்னுயிரும்,
    
ஏழ் உலகும்,
பெற்றனனே ஒத்தான்; 'பெயர்த்தேன்
    
பழி' என்றான்.

பொருள் :
தான் வெட்டுண்டு விழுந்த பின் சீதைக்கு நேர்ந்த நிலையை அறியாமல்  உயிர் நடுங்குமாறு பெருமூச்சு விடுபவனாகிய சடாயுவெற்றி வீரர்களான இராமலக்குவரைக் கண்டவனாய், (அதனால்);  தன் மனம் குளிர்ந்தான்; அறுபட்டு விழுந்த தன் இரு இறகு களையும்;  (தன்) இனிய உயிரையும்;  ஏழு உலகங்களையும்;  ஒருங்கே பெற்றவன் போல (பெரு மகிழ்ச்சி அடைந்தான்); (எனக்கு ஏற்பட்ட பழியையும் அவர்களுக்கு ஏற்பட்ட) பழியையும் நீக்கி விட்டேன் என்று கூறினான்.

(சொ-ள்.)  உற்றது உணராது - (தான் வெட்டுண்டு விழுந்த பின் சீதைக்குநேர்ந்த நிலையை அறியாமல்; உயிர் உலைய வெய்துயிர்ப்பான் - உயிர் நடுங்குமாறு பெருமூச்சு விடுபவனாகிய சடாயு; கொற்றவரைக் கண்டான்வெற்றி வீரர்களான இராமலக்குவரைக் கண்டவனாய், (அதனால்); தன் உள்ளம் குளிர்ப்புற்றான் - தன் மனம் குளிர்ந்தான்; இற்ற இரு சிறகும்அறுபட்டு விழுந்த தன் இரு இறகுகளையும்; இன்னுயிரும் - (தன்) இனிய உயிரையும்; ஏழுலகும் - ஏழு உலகங்களையும்; பெற்றனனே ஒத்தான்ஒருங்கே பெற்றவன் போல (பெரு மகிழ்ச்சி அடைந்தான்); பழிபெயர்த்தேன் என்றான் - (எனக்கு ஏற்பட்ட பழியையும் அவர்களுக்கு ஏற்பட்ட) பழியையும் நீக்கி விட்டேன் என்று கூறினான்.

கம்பராமாயணம் – ஆரணிய காண்டம்  - ( பாடல் 02)

'பாக்கியத்தால், இன்று, என்
    
பயன் இல் பழி யாக்கை
போக்குகின்றேன்; கண்ணுற்றேன்,
    
புண்ணியரே! வம்மின்' என்று
தாக்கி அரக்கன் மகுடத்
    
தலை தகர்த்த
மூக்கினால் உச்சி முறைமுறையே
    
மோக்கின்றான்.


பொருள் :  நல்வினை உடையவர்களே;  பயன் இல்லாத;  பழிப்பதற்குரிய என் உடம்பை;  இப்பொழுது விட்டு விடப் போகிறேன்;   - (நான் செய்த)  புண்ணியத்தால்;  உங்களைக் காணப் பெற்றேன்;  வாருங்கள் என்று (அருகில் அழைத்து); அரக்கன் ஆகிய இராவணனது மகுடத்தோடு கூடிய தலையைத் தாக்கித் தகர்த்திட்ட; (தன் வலிய) அலகினால்;  (அவர்களுடைய) தலை உச்சியை;  மாறி மாறிப் பல முறை மோந்திடுபவன் ஆனான்.


(சொ-ள்.)   புண்ணியரே - நல்வினை உடையவர்களே; பயன் இல் - பயன் இல்லாத; பழி என் யாக்கை - பழிப்பதற்குரிய என் உடம்பை; இன்று போக்குகின்றேன் - இப்பொழுது விட்டு விடப் போகிறேன்; பாக்கியத்தால் - (நான் செய்த) புண்ணியத்தால்; கண்ணுற்றேன் - உங்களைக் காணப் பெற்றேன்; வம்மின் என்று - வாருங்கள் என்று (அருகில் அழைத்து);
அரக்கன் மகுடத்தலை தாக்கித் தகர்த்த - அரக்கன் ஆகிய இராவணனது மகுடத்தோடு கூடிய தலையைத் தாக்கித் தகர்த்திட்டமூக்கினால் - (தன் வலிய) அலகினால்உச்சி - (அவர்களுடைய) தலை உச்சியை; முறை முறையே மோக்கின்றான் - மாறி மாறிப் பல முறை மோந்திடுபவன் ஆனான்.

பழமொழி நானூறு

நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து
நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்
உலக்கைமேல் காக்கையென் பார்.

பொருள் :   நிலத்தின்கண் வாழ்வதற்கு மிகுதியாகிய பெரிய செல்வத்தை விரும்பி, நலத்நன்மை மிகுந்த அரசர்களுள் நல்லோர் ஒருவரை அடைந்து (அங்குத் தங்கியிராமல்) ஓரிடத்தும் தங்குதலைக் கொள்ளாத கால்களை உடையவர்கள், காணிஆராயுமிடத்து, உலக்கை மேலுள்ள காக்கைஎன்று கூறப்படுவார்கள்.

(சொ-ள்.) நிலத்தின் மிகையாம் பெருஞ் செல்வம் வேண்டி - நிலத்தின்கண் வாழ்வதற்கு மிகுதியாகிய பெரிய செல்வத்தை விரும்பி, நலத்தகு வேந்தருள் நல்லோரைச் சார்ந்து - நன்மை மிகுந்த அரசர்களுள் நல்லோர் ஒருவரை அடைந்து (அங்குத் தங்கியிராமல்) நிலத்து நிலைகொள்ளா காலர் - ஓரிடத்தும் தங்குதலைக் கொள்ளாத கால்களை உடையவர்கள், காணின் - ஆராயுமிடத்து, உலக்கைமேல் காக்கை என்பர் - உலக்கை மேலுள்ள காக்கைஎன்று கூறப்படுவார்கள்.

(-து.) அறிவிலார் ஒருவரிடத்திலும் ஒரு தொழிலிலும் நிலைபெறாது வருதலால்நன்மையைப் பெறமாட்டார்கள்.
(வி-ம்.) காக்கை உரலின்கண் உள்ள அரிசியை உண்ணவும் மாட்டாது, உலக்கைமேல் உட்காரவும் மாட்டாது அதனைச் சூழ்வருதல்போல, அறிவிலாரும் ஒருவரிடம் நிலைத்து நிற்காது பயனையும் இழந்து சுழன்று வருவர்என்பதாம்.
'உலக்கை மேல் காக்கை' என்பது பழமொழி.

புறநானூறு – பாடல்

நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேரீ தல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி யுறையினும் பலவே.

 பொருள் :
நாட்காலையே மதுவையுண்டு நாளோலக்கத்து மகிழ்ச்சியை மகிழின், தேர்வழங்குதல் யாவர்க்கும் எளிது; கெடாத நல்லபுகழ் விளங்கும் மலையன் மதுநுகர்ந்து மகிழாது வழங்கிய பொற்படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர், பயன்பொருந்திய முள்ளூர்மலையுச்சியின் கண் உண்டாகிய மழையினது துளியினும் பல- - று.

தமிழ் மொழித்தினப் பாடல்களின் பொருள்கள்  2020
போட்டி இல 29
இ.லக்கிய விமர்சனம்
முதராம் பிரிவு 12, 13

குறுந்தொகை

தேற்றா மன்றே தோழி தண்ணெனத்  
தூற்றுந் துவலைத் துயர்கூர் காலைக்  
கயலே ருண்கட் கனங்குழை மகளிர்  
கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய  
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை,
அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு,
மெய்ம் மலி உவகையின் எழுதரு
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே.


      பொருள் : தோழி, குளிர்ச்சி உண்டாகும்படி, தூவுகின்ற மழைத் துளியையுடைய, துயரம் மிக்க பொழுதில், கயலை ஒத்த மையுண்ட கண்களையும், கனத்தை யுடைய குழையையுமுடைய மகளிர், தம் கையே கருவியாக, நெய்யை வார்த்து ஏற்றிய விளக்கு, துயரத்தை எழுப்புகின்ற, மாலைக்காலத்தில், பெறுதற்கரிய தலைவர் வந்தாராக விருந்து செய்து, உடம்பு பூரிக்கும் மகிழ்ச்சியோடு, முன் எழுந்த, கண் கலங்கியதால் வீழ்கின்ற நீர்த்துளியை, துடைப்போரை  அறியேம்.


சொ- ள் : தோழி, தண் என - குளிர்ச்சி உண்டாகும்படி, தூற்றும் துவலை - தூவுகின்ற மழைத் துளியையுடைய, துயர் கூர் காலை - துயரம் மிக்க பொழுதில், கயல் ஏர் உண்கண் - கயலை ஒத்த மையுண்ட கண்களையும், கனம் குழைமகளிர் - கனத்தை யுடைய குழையையுமுடைய மகளிர்,கை புணை ஆக - தம் கையே கருவியாக, நெய்பெய்துமாட்டிய சுடர் - நெய்யை வார்த்து ஏற்றிய விளக்கு, துயர்எடுப்பும் - துயரத்தை எழுப்புகின்ற, மாலை - மாலைக்காலத்தில், அரு பெறல் காதலர் வந்தென - பெறுதற்கரியதலைவர் வந்தாராக, விருந்து அயர்பு - விருந்து செய்து,மெய் மலி உவகையின் - உடம்பு பூரிக்கும் மகிழ்ச்சியோடு,எழுதரு - முன் எழுந்த, கண் கலிழ் உகுபனி - கண் கலங்கியதால் வீழ்கின்ற நீர்த்துளியை, அரக்குவோர் - துடைப்போரை,தேற்றாம் - அறியேம்.


நன்றி  தமிழ் இணையக் கல்விக்கழகம்


நன்றி  சென்னை நூலகம்
நன்றி  தமிழ் இணையக் கல்விக்கழகம்

  தமிழ் வாழ்க….. வழர்க…….