தம்பன் கடவை ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாவிஷேகத்தினை முன்னிட்டு இடம் பெற்ற சங்காவிஷேக நிகழ்வுகளைச் சிறப்பிப்பும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பாற்குட பவனி 2019.07.08 அன்று ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி அடியார்களால் தத்தமது கிராமங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை அடைந்தன.
மன்னம்பிட்டி ஸ்ரீ செல்வ விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் செல்லும் காட்சிகள்….. பகுதி ஒன்றில் பதிவேற்றப்பட்டுள்ளது.
பகுதி இரண்டில் பாற்குட பவனியில் பங்கு பற்றிய சொறுவில், கறப்ளை, மன்னம்பிட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அனைத்து அடியார்களும் ஆலயத்தை அண்மிக்கும் காட்சிகள் பதிவேற்றப்பட்டுள்ளன.
பகுதி இரண்டின் இணைப்பு https://youtu.be/EYXQ0F9KsJI
பகுதி மூன்றில் பாற்குட பவனியில் ஈடுபட்டவர்களை ஆலய நிர்வாக சபையினர் வரவேற்று ஆலயத்தினுள் அழைத்துச் செல்வதையும், அனைத்து அடியார்களும் பாற்குட பவனியை நிறைவு செய்து, ஆலயத்தினுள் நுழைந்ததும், பால்குட பவனியின் இறுதி அம்சமாகத் தம்பன் கடவை ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமிக்குப் பாலபிஷேகம் நடத்தப்படுவதனையும் காணலாம்.
பகுதி மூன்று இணைப்பு https://youtu.be/pkxy7faSZMQ
அனைவருக்கும் தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி அருள் புரிவாராக…