இக் கிராமமானது பொலன்னறுவை மாவட்டதில் தமிழர் வாழ்ந்து வருவதற்கான பிரதான சான்றாகத் திகழ்ந்து வருகின்றது. இங்கு தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதற்கான சான்றுகள் நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆதாரங்களைக் கொண்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் தமிழ்மக்கள் கிழக்கு மாகாணத்தை அண்டியே வாழ்கின்றனர்.
மன்னம்பிட்டியில் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய மூவினத்தவரும் இணைந்து வாழ்கின்றனர். ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது மகாவலி அபிவித்தித் திட்டம் என்ற போர்வையில் பல குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், தமிழ் மக்களின் விகிதாசாரம் குறைந்து கொண்டே போகின்றது.
- கிராமத்தில் அமைந்துள்ள ஆலயங்கள்:
- தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்
- ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
- கண்ணகி அம்மன் ஆலயம்
- மாரியம்மன் ஆலயம்
- காளி கோயில்
- மன்னம்பிட்டி விகாரை
- மன்னம்பிட்டி பள்ளிவாசல்
- மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயம் (http://www.mtmv.sch.lk/)
- மன்னம்பிட்டி சிங்கள மகா வித்தியாலயம்
அரசாங்க அலுவலகங்கள்
- கிராமிய வைத்தியசாலை
- ஆயுர்வேத வைத்தியசாலை
- புகையிதர நிலையம்
- பிரதேச செயலாளர் அலுவலகம்
- வலயக் கல்விப் பணிமணை
- ஆசிரியர் வள நிலையம்
- செலான் வங்கி
- பிரதேச அபிவிருத்தி வங்கி
- கிராமிய அபிவிருத்தி வங்கி
- நலன்புரிச் சங்கம்
- இந்து இளைஞர் பேரவை
- இளைஞர் கழகம்
- சக்தி விளையாட்டுக் கழகம்
- மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்
- மகளிர் சுய உதவிக் குழுக்கள்
வணக்கம்...